டெல்லியில் 100 நாள் போராட்டம் முடிந்து ஊர் திரும்பிய தமிழக விவசாயிகள்: கிடைத்தது என்ன?

விவசாய கடன்கள் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த ஜூலை 16-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வந்த அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள் குழுவினர், அப்போராட்டத்தில் 100-வது நாளான திங்கள்கிழமை இரவு தமிழகம் கிளம்பியுள்ளனர்.

Image caption நவம்பர் 30 அன்று மீண்டும் டெல்லி திரும்பவுள்ளதாக அய்யாக்கண்ணு கூறினார்

போராட்டம் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் பிபிசி தமிழிடம் பேசிய அய்யாக்கண்ணு, இந்தப் போராட்டத்திற்கான ஆதரவு குறித்து தாங்கள் கவலைப்படவில்லை என்றும் இந்தப் போராட்டம் விவசாயிகள் பிரச்சனை குறித்து நாடு முழுவதும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினார்.

"டெல்லியில் எங்களுக்கு சோறு போட்ட சீக்கிய குருத்வாராவைச் சேர்ந்தவர்களை மிரட்டினார்கள். ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில், நாய்க் கடியால் பாதிக்கப்பட்ட ஒரு விவசாயிக்கு அடிப்படை சிகிச்சை மட்டுமே வழங்கி, ராபிஸ் தடுத்து ஊசி இல்லை என்று கூறி மறுத்தனர். எய்ம்ஸ் மருத்துவமனையில் எனக்கு டெங்கு சிகிச்சை மறுக்கப்பட்டது," என்றும் குற்றம்சாட்டினார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உயிர் பெறும் டைனோசர்கள்..! உருவாக்குவது யார்?

வரும் நவம்பர் மாதம் 30-ஆம் தேதி, 29 மாநிலங்களிலும் இருந்து வரும் விவசாயிகள் பங்கேற்கும் போராட்டம் டெல்லியில் நடைபெறும் என்று அய்யாக்கண்ணு பிபிசியிடம் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பல வழிகளில் போராடி மக்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை விவசாயிகள் ஈர்த்தனர்

"சுதந்திர தினத்தன்று கூட எங்களை நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல் நிலையத்தில் அடைத்து வைத்தனர். எனவே, எங்கள் போராட்டங்களை தடுக்க டெல்லி காவல் துறையினர் முயல்வார்கள். அதையும் மீறி, ஒரே நாளில், பல்வேறு இடங்களில் போராடுவோம்," என்று தெரிவித்தார் அய்யாக்கண்ணு.

தமிழகத்தில் இருந்து அப்போராட்டத்திற்கு சுமார் 5,000 விவசாயிகளை அழைத்து வரும் முயற்சியில் இருப்பதாகவும் அய்யாக்கண்ணு கூறினார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்