கழிவறை இல்லாத வீட்டில் கெட்டிமேளம் கிடையாது: பஞ்சாயத்து தீர்மானம்

கழிவறை இல்லாத வீட்டில் கெட்டிமேளம் கிடையாது படத்தின் காப்புரிமை AJAY

'நம் பெண்கள், ஒவ்வொரு தேவைக்காகவும் போராடவேண்டியிருக்கிறது'. இது 'டாய்லெட்: ஒரு காதல் கதை' என்ற திரைப்படத்தில் கதாநாயகி கூறும் வசனம். ஆனால் ஆயிரக்கணக்கான இந்தியப் பெண்களின் துயரத்தை வெளிப்படையாக சொல்லும் நிதர்சனமான உண்மை.

கழிவறை இல்லாமல் பெண்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை தீர்ப்பதற்காக உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேற்குப்பகுதியில் உள்ள பாஹ்பத்தின் பிஜ்வாடா கிராம பஞ்சாயத்து, முக்கியமான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. எந்த வீட்டில் கழிவறை இல்லையோ, அங்கு திருமணம் நடக்காது என்பதே அந்த தீர்மானம்.

இந்த நிபந்தனை ஆண் பெண் என திருமணம் செய்து கொள்ள காத்திருக்கும் இருபாலினரின் குடும்பங்களுக்கும் பொருந்தும். மருமகள் அல்லது மருமகன் வந்தால் அவர்கள் பயன்படுத்த கழிவறை இல்லாத வீட்டில் திருமணம் மட்டும் எதற்கு?

இந்தத் தீர்மானத்தின் பின்னணி என்ன?

கிராமத்தலைவர் அர்விந்த்திடம் பேசினோம்.

''சனிக்கிழமையன்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், மகள் மருமகள்களின் மரியாதையை காப்பாற்ற வேண்டும் என்றால் அனைத்து வீடுகளிலும் கழிவறை இருப்பது அவசியம் என்று முடிவுசெய்தோம். கிராமங்களில் வசிக்கும் பெண்கள், விடியற்காலையிலும், இருட்டியபிறகும் ஒதுக்குப்புறங்களைத் தேடி செல்ல வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது என்பதால் இந்த முடிவுக்கு வந்தோம்'' என்கிறார் கிராமத்தலைவர் அர்விந்த்.

கிராமத்தில் எதாவது ஒரு பெண்ணுக்கு நடைபெற்ற அசம்பாவித சம்பவத்தின் பின்னணியில் இந்த முடிவு இருக்கிறதா?

படத்தின் காப்புரிமை AJAY KUMAR

இந்த கேள்விக்கு பதிலளிக்கும் பஞ்சாயத்துத் தலைவர், ''அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை. ஆனால் பெண்கள் ஊரின் ஒதுக்குப்புறமான வயல்வெளிகளிலும், ஆற்றங்கரைகளுக்கும் சென்று மலஜலம் கழிக்க வேண்டியிருக்கிறது. அங்கு விவசாயிகளின் நடமாட்டமும் இருக்கும். இதனால் பெண்களுக்கு தர்மசங்கடம் ஏற்படுகிறது. அதனால்தான் நாங்கள் இந்த முடிவை எடுத்தோம்.''

கிராமத்தில் சுமார் 1000-1200 பெண்களின் திருமணம் முசாஃபர்நகர் மற்றும் ஷாம்லி மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் நடைபெற்றுள்ளது. அங்கிருக்கும் 20-25% வீடுகளில் கழிவறையே இல்லை.

முசாஃபர்நகர் மற்றும் ஷாம்லியில் பஞ்சாயத்து தீர்ப்பின் எதிரொலி

பாஹ்பத் கிராம பஞ்சாயத்தின் இந்தத் தீர்மானம், முசாஃபர்நகர் மற்றும் ஷாம்லி மாவட்டங்களில் ஏற்படுத்திய தாக்கத்தை தெரிந்துக் கொள்வதற்காக ஷாம்லி மாவட்டத்தின் பாபர் கிராமத்தின் தலைவர் ஆனந்த் பாலுடன் பேசினோம்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
காது

"எங்கள் கிராமத்தில் 180 வீடுகளில் மட்டுமே கழிவறைகள் இல்லாத நிலை இருந்தது. ஆனால் கழிவறை கட்டுவதற்கு நிதியுதவி அளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். தற்போது 40 வீடுகளில் மட்டுமே கழிவறை இல்லை, அங்கும் கழிவறைகள் விரைவில் கட்டப்படும்" என்கிறார் ஆனந்த் பால்.

முசாஃபர்நகரின் லூசானா கிராமத்தலைவர் அனில் கூறுகிறார், "இந்தத் தீர்மானம் வரவேற்கப்படவேண்டியது. எங்கள் கிராமத்தில் உள்ள 1000 வீடுகளில் 60இல் மட்டுமே கழிவறை இல்லை. அங்கும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தத் தீர்மானத்தால் வேறுபல கிராமங்கள் பாதிக்கப்படலாம்".

உள்ளூர் மக்களின் கருத்து என்ன?

பாஹ்பத் மாவட்டத்தின் ஹில்வாடி கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலி கூறுகிறார், ''பெண்களைப் பற்றியும் பஞ்சாயத்து சிந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. வயல்வெளிகளில் அசுத்தம் செய்வதால் நோய்கள் ஏற்படுகிறது. ஏழைகள் கழிவறை கட்டுவதற்கு பஞ்சாயத்து உதவி செய்யவேண்டும்.''

அரசு அறிக்கையின்படி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் கழிவறைகள் கட்டுவதற்காக 10,28,541 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 2,72,822 கட்டப்பட்டுவிட்டது அல்லது கட்டுமானப் பணி நடந்துக் கொண்டிருக்கிறது. இதன்படி கணக்கிட்டால் மாநிலத்தில் சுமார் எட்டு லட்சம் கழிவறைகள் கட்டப்படவேண்டும்.

படத்தின் காப்புரிமை HAIDAR MALIK
Image caption அஞ்சலி

பாவ்லி கிராமத்தில் வசிக்கும் சுரேந்த்ர பவார் கூறுகிறார், ''கழிவறை இல்லாததால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். எனவே இந்த தீர்மானம் வரவேற்கத்தக்கது''.

இருந்தாலும், கழிவறை இல்லாத வீட்டில் திருமணமே நடக்கமுடியாது என்பது கொஞ்சம் அதிகமான கண்டிப்பாகத் தெரிவதாகவும் சுரேந்த்ர பவார் கருதுகிறார். ''சில நேரங்களில் மக்களுக்கு பலவிதமான நிர்பந்தங்கள் இருக்கலாம். அதையும் கருத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்''.

சுரேந்த்ர பவாரின் கருத்துக்கு கிராமத் தலைவர் அர்விந்த் என்ன பதிலளிக்கிறார்? கழிவறை கட்டும் ஏழை மக்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது என்கிறார் அவர்.

அர்விந்தின் முடிவின் பின்னணியில் உள்ளூர் நிர்வாகத்தின் தூண்டுதல் இருக்கிறதா என்று கேட்டோம். இந்த தீர்மானத்தை கிராமமக்கள் அனைவரும் ஒன்றாக கூடி எடுத்தோம் என்று சொல்லும் அர்விந்த், இதன்மூலம் தூய்மை இந்தியா இயக்கமும் முன்னெடுத்து செல்லப்படுவதாக இது என்கிறார்.

படத்தின் காப்புரிமை HAIDAR MALIK
Image caption சுரேந்த்ர பவார்

சுரேந்த்ர பவாரின் கருத்துக்கு கிராமத் தலைவர் அர்விந்த் என்ன பதிலளிக்கிறார்? கழிவறை கட்டும் ஏழை மக்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது என்கிறார் அவர்.

அர்விந்தின் முடிவின் பின்னணியில் உள்ளூர் நிர்வாகத்தின் தூண்டுதல் இருக்கிறதா என்று கேட்டோம். இந்த தீர்மானத்தை கிராமமக்கள் அனைவரும் ஒன்றாக கூடி எடுத்தோம் என்று சொல்லும் அர்விந்த், இதன்மூலம் தூய்மை இந்தியா இயக்கமும் முன்னெடுத்து செல்லப்படுவதாக இது என்கிறார்.

மக்களின் கருத்து

பிஜ்வாடா கிராமத்தின் பாயல் கூறுகிறார், "பஞ்சாயத்தின் இந்த தீர்மானத்திற்கு முன்னரே கழிவறை இல்லாத வீட்டில் திருமணம் செய்துக்கூடாது என்ற முடிவில்தான் இருந்தேன்".

"பெண்கள் பர்தா அணியவேண்டும், உடல் தெரியுமாறு ஆடை அணியக்கூடாது என்று ஒருபுறம் கட்டாயப்படுத்துகிறார்கள். மறுபுறமோ வீட்டில் கழிவறைகள் கூட இல்லை என்ற நிலை! இந்தத் தீர்மானத்திற்கு பிறகாவது எல்லா வீடுகளிலும் கழிவறை கட்டட்டும்" என்று சொல்கிறார் மல்க்பூர் கிராமத்தின் ரீதிகா.

தூய்மை இந்தியா இயக்கத்தின் புள்ளிவிவரங்களில் இருந்து நம் நாட்டில் கழிவறைகள் போதுமான அளவு இருக்கிறதா என்பதை தெரிந்துக்கொள்வோம்.

இந்திய கிராமப்புறங்களில் வசிக்கும் 52.1% மக்களும், நகர்ப்புறங்களில் 7.5% மக்களும் திறந்தவெளியில் மலஜலம் கழிக்கிறார்கள்.

எனவே கிராமங்களில் பஞ்சாயத்து நிலையில் இதுபோன்ற தீர்மானங்கள் நிறைவேற்றுவதும், அவற்றை சரியாக கடைபிடிப்பதும் பெண்களுக்கு அத்யாவசியத் தேவை மட்டுமல்ல அடிப்படைத் தேவை என்றே சொல்லலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்