"நீர் வடிகால் தடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு மீது கோபம் அதிகரிக்கும்"
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சமானது, 2015-ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட அழிவின் தாக்கத்தால் உண்டானதா?, அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் நம்பிக்கையின்மையா? என்று வாதம் விவாதம் பகுதியில் நேயர்கள் தெரிவித்த கருத்தை தொகுத்து வழங்குகின்றோம்.

இந்த கேள்விக்கு நேரடியாக "எந்த அச்சமும் கிடையாது" என்று கிங்ஸ் என்பவர் தெரிவித்திருக்கிறார்.
"இரண்டும் கலந்த பயம்" என்று சிவசெந்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இது பற்றி கருத்து பதிவிட்டுள்ள சக்தி சரவணன், "அச்சம் தவிர்" "ஈகை திறன்" என எண்ணற்ற இளைய பாரதிகள் (சமூக ஊடக தோழர்கள்) விழிப்புடன் செயல்பட (அரசிற்கு முன்னதாகவே) தொடங்கிவிட்டனர்.
மக்களின் அச்சமென்பதை விட நீர் வடிகால் தடங்களின் ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்க தவறிய அரசின் மீதான கோபமே அதிகமாக இருக்கும்.
திராவிடக் கட்சிகளின் அரை நூற்றாண்டு கனவு கூவம் ஆற்றின் தூய்மைத் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின் மூலமே சாத்தியப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
பட மூலாதாரம், NAVEEN
மழை வெள்ளத்தைவிட #மந்திரிகளின் #தொ்மாகோல் போன்ற திட்டங்கள்தான் கண்முன்னே வந்து #மிரள வைக்கின்றது என்கிறார் ஆர்.ராஜ்
எம். புகாரி என்பவர் "இந்த அரசை நம்பினால் செத்துதான் மடியவேண்டும் நம்மை நாம்தான் கப்பற்றக்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.
அமானுல்லா அஜ், "எந்த ஏரிகளையும் திறந்து விடாமல் இருந்தாலே போதும்" என்று கூறியுள்ளார்.
பிற செய்திகள்
- நியூ யார்க் தாக்குதல்: டிரக் மோதி 8 பேர் பலி
- ரஷ்ய அதிபரை கொல்லத் திட்டமிட்டவரின் மனைவி சுட்டுக்கொலை
- வடகிழக்கு பருவமழை தீவிரம்: சென்னை மக்களிடையே அச்சம் - காரணம் என்ன?
- சீர்திருத்தப் புரட்சி: “பிரிவினையை சமாளிக்கும் நம்பிக்கையின் அடையாளம்”
- சுடப்பட்ட இந்திரா காந்தியின் உயிரை காப்பாற்ற '80 பாட்டில் ரத்தம்': நடந்தது என்ன?
- 10 வயது சிறுமி பாலியல் வல்லுறவு: தாய்மாமன்கள் குற்றவாளி என தீர்ப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்