உத்தரப்பிரதேசம்: அனல் மின் நிலைய விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரேபரேலி மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய அனல் மின் நிலையத்தில் (என்டிபிசி)ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த விபத்து குறித்து பிபிசியிடம் பேசிய ரேபரேலி மாவட்ட நீதிபதி சஞ்சய் காத்ரி 22 உயிரிழப்புகளை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த விபத்தில் 17 பேர் அனல் மின் நிலையத்தில் இறந்துள்ளனர். மேலும், காயமடைந்து சிகிச்சைக்காக லக்நௌ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 பேர் இறந்துள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் பலருக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

முன்னதாக, இந்த தேசிய அனல் மின் நிலையத்தில் (என்டிபிசி) புதன்கிழமையன்று காலை விபத்து ஏற்பட்டது.

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மொரிஷியஸ் சுற்றுப்பயணத்திற்கு சென்றார், இந்த விபத்து குறித்து அறிந்த அவர் காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சையை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்