10 வயது சிறுமி பாலியல் வல்லுறவு வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை
தனது தாய்மாமன்கள் இருவரால் 10 வயது சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து சண்டிகரில் உள்ள விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர்கள் மீதான குற்றம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாக கடந்த செவ்வாயன்று நீதிமன்றம் கூறியிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
(கோப்புப் படம்)
தீர்ப்பு வழங்கிய மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி பூனம் ஜோஷி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குற்றவாளிகள் இருவரும் தலா மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
குற்றவாளிகள் இருவரும் தங்கள் குடும்பங்களின் பொருள் ஈட்டும் ஒரே நபராக உள்ளவர்கள் என்பதாலும், அவர்களுக்கு இளம் வயதில் குழந்தைகள் இருப்பதாலும் குறைவான தண்டனை வழங்க வேண்டும் என குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
ஷேக்குகளுக்கு விடுமுறை மனைவிகளாக விற்கப்பட்ட இந்திய சிறுமிகள்
சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரது மூத்த மாமா கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். சண்டிகரில் உள்ள நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை மருத்துவக் காரணங்களுக்காக அச்சிறுமியின் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க அனுமதி மறுத்ததால், ஆகஸ்டில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
கைது செய்யப்பட்ட நபரின் டி.என்.ஏ மாதிரியுடன் சிசுவின் டி.என்.ஏ மாதிரி ஒத்துப் போகாததால், மீண்டும் சிறுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, அவரது இளைய மாமா கைது செய்யப்பட்டார். அவர்தான் சிசுவின் தந்தை என்பது பின்னர் நடந்த டி.என்.ஏ பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
தண்டனை விவரங்களைக் கேட்ட குற்றவாளி ஒருவரின் மனைவி நீதிமன்ற வளாகத்திலேயே கதறி அழுதார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்