வாதம் விவாதம் : "இங்கே ஏழைக்கு ஒரு சட்டம் பணக்காரர்களுக்கு ஒரு சட்டம்"

முகமது பின் சல்மான்

பட மூலாதாரம், AFP

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையாக செளதியில் இளவரசர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த பின்னணியில், இந்தியாவில் ஊழல் தடுப்பு சட்டங்கள் பாரபட்சமின்றி அமல்படுத்தப்படுகிறதா? அரசியல் கண்ணோட்டத்துடன் ஒருதலைப்பட்சமாக அமல்படுத்தப்படுகிறதா? என்று வாதம் விவாதம் பகுதியில் கேட்டு இருந்தோம்.

அதற்கு பிபிசி நேயர்கள் பதிவு செய்துள்ள கருத்துகள்.

"இந்தியாவில் ஊழல் தடுப்பு சட்டம் மட்டுமல்ல எந்த சட்டமாயினும் பாரபட்சம் பார்க்கபடுகிறது." என்கிறார் சாகர் வின்சென்ட்.

"இங்க கைது பண்ணுவாங்க,ஆனால் நீதிமன்றம் விடுதலை பண்ணும்..இதுதான்ங்க நம்ம இந்தியா" என்று கருத்து தெரிவித்து இருக்கிறார் கிங்க்ஸ்

"ஆட்சியை ஆதரிப்பவர்கள் ஊழல் செய்தால் சரி. ஆட்சியை எதிர்ப்பவர்கள் ஊழல் செய்தால் தவறு. இதுதான் இந்தியாவின் எழுதப்படாத சட்டம்" என்கிறார் வெற்றி.

"இந்தியாவில் நல்லவிதமாகநடப்பது ஊழல் மட்டும்தான்" என்று கருத்தை பதிவு செய்திருக்கிறார் குணசேகரன்.

"இந்தியா ஊழலுக்கு எதிராக செயல்பட்டதை விட ஆதரவாக செயல்பட்டது தான் அதிகம்" என்கிறார் ராஜ்குமார்.

"பாராபட்சமின்றி இருந்திருந்தால் 99% அரசியல்வாதிகள் சிறையில் இருப்பார்கள்" என்கிறார் முகமது ஹாமு

"இல்லை இங்கே ஏழைக்கு ஒரு சட்டம் பணக்காரர்களுக்கு ஒரு சட்டம்" என்கிறார் மதி விஜய்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :