#வாதம் விவாதம்: ''சட்டம் இயற்றுவதே அமைச்சர்கள்தானே..எப்படி சீர்திருத்துவது? ''

#வாதம் விவாதம்:

இந்திய எம்.பிக்கள், பிரபலங்கள் உள்பட 714 பேர் வெளிநாடுகளில் ரகசிய வங்கிக் கணக்குகளில் முதலீடு செய்திருப்பதாக பேரடைஸ் ஆவண கசிவு மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை முதலீடு செய்வதை வருமான வரி சீர்திருத்தங்கள் மூலம் கட்டுப்படுத்த முடியுமா? என்ன செய்தாலும் கருப்பு பணத்தை கட்டுக்குள் வைக்க முடியாதா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு பிபிசியின் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் நேயர்கள் தெரிவித்த கருத்துகள் இங்கே.

''சட்டங்களின் அனைத்து ஓட்டைகளையும் அறிந்த அரசியல்வாதியும், கார்ப்பரேட் முதலாளிகளும் இணைந்து கறுப்பு பணத்தை பதுக்குகிறார்கள் தேவைப்படும்போது வெள்ளையாக்குகின்றனர்.'' என்று அமனுல்லா கூறியுள்ளார்.

''சட்டம் இயற்றுவதே அமைச்சர்கள்தானே. அப்புறம் எப்படி சீர்திருத்துவது? கட்டுப்படுத்துவது...?'' என சாந்தபிரதீர் கேட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்