டெல்லி காற்று மாசுபாடு: "அதிகாரிகள், மக்கள் இருவருமே பொறுப்பு"

நச்சுப் புகையால் ஸ்தம்பித்த டெல்லி படத்தின் காப்புரிமை Getty Images

கடுமையான காற்று மாசுபாட்டால் திணறுகிறது டெல்லி. மாசுபாட்டை தடுக்க தவறியதற்கு அதிகாரிகளின் செயலற்றதன்மை காரணமா? அல்லது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இல்லாத மக்களின் நடவடிக்கை காரணமா? என்று வாதம் விவாதம் பகுதியில் கேட்டு இருந்தோம்.

அதற்கு பிபிசி நேயர்கள் பதிவு செய்துள்ள கருத்துகள்.

வெற்றி சொல்கிறார், "மக்கள் எப்போதும் போலதான் செயல்படுகிறார்கள். அதிகாரிகளின் செயலற்றதன்மைதான் இதற்கு மூலகாரணம்."

"இயந்திர தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்தில், நம்முடைய "இயற்கையொத்த மரபு அறிவை" இழந்து தொழிற்சாலைப் பெருக்கமே நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் என நினைத்து இயற்கையை வஞ்சித்ததன் பின்விளைவுகளுக்கு மக்களும், மக்களை வழிநடத்தும் அரசுமே பொறுப்பு ஏற்க வேண்டும்." என்பது சக்தி சரவணனின் கருத்து.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption டெல்லியின் சில பகுதிகளில் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்திருந்த அளவைவிட 30 மடங்கு அதிக காற்று மாசுபாடு நிலவியது.

"காற்று மாசுக்கு அதிகாரிகள், பொதுமக்கள் என அனைவருமே பொறுப்பு." என்று தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார் கண்ணன் பவானி.

சூரியகுமார் சுப்ரமணியன் கிண்டலாக, "இதுதான் தூய்மை இந்தியா" என்று பதிவிட்டு இருக்கிறார்.

"ஊடகத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்த தவறியதே நிதர்சனமான நிஜம்" என்று தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார் ஷானாவாஸ்.

Image caption டெல்லி காற்று மாசுபாடு

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்