ஆப்கன் சோதனைச் சாவடி மீது தாலிபன் தாக்குதல்: டஜன் கணக்கில் பலி

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் நடத்திய தொடர் தாக்குதலில் டஜன் கணக்காணோர் இறந்துள்ளனர்.

நாட்டின் தெற்கு மாகாணமான கந்தஹாரில் உள்ள சோதனைச் சாவடிகள் மீது 6 மணி நேர காலத்தில் தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட போலீசார் இறந்தவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரம், 45க்கும் அதிகமான தலிபான்கள் கொல்லப்பட்டுவிட்டதாகவும், 30க்கும் மேற்பட்ட தாலிபான்கள் காயமடைந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஒரு சோதனைச் சாவடியைக்கூட தலிபான்களால் பிடிக்கமுடியவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

தாங்கள்தான் இத்தாக்குதலை நடத்தியதாக தலிபான்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :