ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

1,700 ஆண்டுகள் பழமைவாய்ந்த புத்தர் சிலை கண்டுபி்டிப்பு

படத்தின் காப்புரிமை TEH ENG KOON

உறங்கிய நிலையில் இருக்கும் புத்தரின் பழங்கால சிலையின் எஞ்சியிருக்கும் பகுதிகளை பாகிஸ்தானில் உள்ள தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 1,700 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிலையாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

வீட்டுக்காவலில் இருக்கும் ஜிம்பாப்வே அதிபரின் புகைப்படங்கள் வெளி்யீடு

படத்தின் காப்புரிமை Reuters

தற்போது ஜிம்பாப்வேயில் வீட்டுக்காவலில் இருக்கும் அந்நாட்டு அதிபர் ராபர்ட் முகாபேவின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில், ராணுவ தளபதி மற்றும் தென் ஆஃப்ரிக்காவை சேர்ந்த சிறப்பு தூதர்களுடன் பேச்சுவார்த்தையில் முகாபே ஈடுபட்டிருப்பது போல் தோன்றுகிறது.

ஜார்ஜ் எச் டபிள்யு புஷ் மீது பாலியல் குற்றச்சாட்டு

படத்தின் காப்புரிமை Getty Images

1992 ஆம் ஆண்டில், ஜார்ஜ் எச் டபிள்யு புஷ் அமெரிக்காவின் அதிபராக தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட போது, பிரசார கூட்டம் ஒன்றில் தன்னை பொருத்தமற்ற முறையில் தொட்டார் என்று தற்போது 55 வயதாகும் பெண் ஒருவர் புஷ் மீது குற்றம்சாட்டியிருக்கிறார்.

செனட் உறுப்பினர் மீது பாலியல் குற்றச்சாட்டு

படத்தின் காப்புரிமை KABC

உறங்கிக்கொண்டிருந்த போது தனது மார்பு பகுதியை அழுத்தியதாக தற்போது அமெரிக்காவின் செனட் உறுப்பினராக இருக்கும் அல் ஃபிராங்கென் மீது பெண் ஒருவர் குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு அல் ஃபிராங்கென் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

அமெரிக்காவில் கார்ப்பரேட் வரி விகிதங்கள் குறைப்பு

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க வரி விதிப்பு சட்டத்தில் சர்ச்சைக்குரிய ஒரு வரி குறைப்பு திட்டத்திற்கு அந்நாட்டின் பிரதிநிதிகள் சபை ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளது. இதன்மூலம், கார்ப்பரேட் விகிதங்கள் குறைய உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்