ஜெயலலிதா இறந்து ஓராண்டு கழித்து அவர் வீட்டில் வருமான வரி சோதனை ஏன்?

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டில் நடத்தப்பட்டுள்ள வருமான வரித்துறை சோதனை தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பெரிய செய்தியாகியுள்ளது. "இது முறையான சோதனை நடவடிக்கைகளின் ஓர் அங்கமா? அரசியல் உள்நோக்கம் கொண்டது என்ற குற்றச்சாட்டு முறையா?" என்று பிபிசி தமிழின் வாதம்-விவாதம் பகுதியில் சமூக வலைத்தள நேயர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் அளித்த பதிலை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜெயலலிதா

"அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதை சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. தொடர்ந்து தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலைகளை ஏறபடுத்தி கட்சியும் ஆட்சியையும் நிலைகுலைய செய்கிறது மத்திய அரசு. முறையான சோதனை செய்கிறது என்றால் இரண்டே ஆண்டுகளில் அபார வளர்ச்சி அடைந்த அமித்ஷா வின் மகன் மீது குற்றசாட்டு வரும்போது உடனே அங்கே நடத்தி இருக்கலாமே!!! அப்படி செய்தால் இது அரசியல் உள்நோக்கம் இல்லை என்று ஏற்று கொள்ளலாம். ஆனால் இங்கே அதற்கான சாத்தியகூறு இல்லையே," என்கிறார் பீர் முகமது.

திசை திருப்பும் முயற்சியா?

சசிகலா குடும்பம்தான் மக்களா

"மக்களால் நான்... மக்களுக்காகவே நான்...இப்படி தான் ஜெயலலிதா வாழ்ந்தாங்கனு நினைத்தேன்...! மக்களால் என்பது சசிகலா குடும்பத்தை சொன்னாங்க போல..! ஜெயலலிதா!!!," என்கிறார் உதயகுமார் எனும் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்.

"அந்த அம்மையார் இருக்கும் போது எதையே எதிர்பார்த்து அந்த அம்மாவும் அவர்களை சார்ந்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டை கொள்ளையடித்ததை கண்டும் காணமல் இருந்துவிட்டு இன்று செல்லவேண்டிய தெல்லாம் ஆங்கங்கே அப்புறப்படுத்திய பின் வீடுவரை ரைடு போனது புரியாத ஒன்று இந்திய அரசியல் சட்டப்படி திருடன் மட்டுமல்ல திருட்டுக்கு துணை போனவனும் திருடனே!,"என்கிறார் தங்கம் எனும் நேயர்.

மிகவும் காலதாமதமானது

" ஒரு வருடம் கழித்து நடக்கும் ரெய்டு மிகவும் காலதாமதமானது,எல்லா தடயத்தையும் மன்னார்குடி குடும்பத்தினர் அழித்திருப்பர்..," என்கிறார் கிங்ஸ் எனும் பெயரில் ஃபேஸ்புக்கில் பதிவிடும் நேயர்.

"சோதனை தவறு இல்லை.இதே போல் அரசியல்வாதிகள் வீட்டில் போட்டால் நம்பும்படியாக இருக்கும். சுவிஸ் பேங்க் என்ன ஆச்சு பிரதமர் ஐயா? அத இத சோதனை பன்னியே டைம்பாஸ் பன்னாதீங்க.சேகர்ரெட்டி என்னாச்சு.," என்கிறார் முத்துசாமி.

"முறையான சோதனைதான்.அரசியல் உள்நோக்கம் இதில் ஒன்றும் இல்லை. தான் இல்லாதபோது அந்த சொத்துக்களை அரசுதான் எடுக்கவேண்டும்.உறவினா்கள் யாரும் இல்லை.சோதனையை தடுப்பது மிகவும் குற்றம்," என்பது முத்தீஸ்வரன் எனும் நேயரின் கருத்து.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்