70 கோடி இந்தியர்களுக்கு சரியான கழிப்பறை இல்லை: ஆய்வு முடிவுகள்

கழிவறை படத்தின் காப்புரிமை PRAKASH SINGH/AFP/Getty Images

உலக கழிவறை தினத்தில், வெளியாகியுள்ள புதிய ஆய்வறிக்கையின்படி, உலகிலேயே இந்தியாவில் தான், அடிப்படை சுகாதாரத்திற்காக கழிவறைகளை பயன்படுத்தும் வசதி இல்லாத அதிகம் மக்கள் வாழ்வதாக தெரியவந்துள்ளது.

`வாட்டர் எய்ட்` எனப்படும் நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக முன்னேற்றம் இருந்தாலும், இன்னும் கூட இந்தியாவில் 700 மில்லியன் மக்கள், பொது இடங்களிலோ அல்லது பாதுகாப்பற்ற முறையிலோ தான் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டியுள்ளது என்று கூறுகிறது.

இதற்கு நேர்மாறாக, வங்கதேசத்தில், பொதுவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கும் நிலை கிட்டத்தட்ட அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது அந்த ஆய்வு.

இந்த ஆய்வின் அடிப்படையில், அடிப்படை சுகாதார பயன்பாட்டின் நிலை மிகவும் மோசமாக உள்ள பத்து நாடுகளும், சஹாரா பாலைவனப்பகுதியில் உள்ள ஆஃப்ரிக்க நாடுகளாகும்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பொதுக்கழிவறை தட்டுப்பாடு : வழிகாட்டும் ஜெர்மன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்