அன்றைய இந்திரா - இன்றைய மோடி: "இருவருக்கும் ஒரே முகமா?"

முன்னாள் இந்திய பிரதமரான இந்திரா காந்தியின் நூற்றாண்டு பிறந்தநாள் இன்று. இன்றைய காலக்கட்டத்தில் இந்திரா போன்ற ஒரு தலைவரின் தேவை அவசியமா? அல்லது இன்றைய இந்தியாவுக்கு இந்திராவின் அணுகுமுறை அவசியம் இல்லை? என்று பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

படத்தின் காப்புரிமை Getty Images

அதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் அளித்த கருத்துக்கள் இதோ.

"கட்சியில்,சர்வாதிகாரம் ஆட்சியில் சக்திவாய்ந்த நிர்வாகி இதெல்லாம் அவரது பிளஸ் .இருப்பினும் அவர் மக்களது பிரதமராகவே இருந்தார்.எமெர்ஜென்சி யின் பின் அவரது தோல்வி கூட மக்கள் கொடுத்த ஒரு குட்டுபோல் தான்.நேருவின் மகள் என்பதுவும் இதற்கு ஒரு காரணம்.சர்வதேச அளவில் பெரும் சக்தியாக எண்ணப்பட்டவர்.இன்று இருந்தால் நாடு ஒரு கட்டுக்கோப்பாக இருந்து இருக்கலாம்.ஆனால் சமூக ஊடகங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில் மாறாகவும் நடந்திருக்க வாய்ப்புள்ளது." என்று தன் கருத்தினை பதிவு செய்துள்ளார் கணேஷ் கருப்பையா.

வெங்கடாசலம் பாலமுருகன், "பெண்ணடிமையை கொண்ட நாடு என்று உலகத்தால் முன்மொழியப்பட்டாலும் பல சரித்திர பெண் சிங்கங்களை ஈன்று பெருமைப்படுத்திய நாட்டின் நிகழ்கால நூற்றாண்டின் அடையாளம் இந்திரா காந்தி" என்கிறார்.

ஜமால் முகமதுவின் கருத்து, "இந்தியாவின் இரும்பு பெண்மணி அன்னை இந்திரா காந்தி அவர் செய்த சமூக சீர்த்திருத்தம் பொருளாதார சீர்த்திருத்தம் கல்வி முன்னேற்றம் விவசாயிகளின் நலன் சமய சார்பற்ற நிலை இன்னும் எவ்வளவோ சொல்லி கொண்டு போகலாம் மேலாக நம்நாட்டின் முன்னேற்றத்திற்காக தன் இன்னுயிரையே தந்த ஒரு மா பெரும் தீர்க்கதரிசி இந்திரா அம்மையார்."

"அன்றைய இந்திரா, இன்றைய மோடி இருவருக்கும் முகம், கட்சி மட்டுமே வேறுபட்டு உள்ளதே ஒழிய பன்மைத்துவம் கொண்ட இந்திய ஒன்றியத்தை, ஒற்றைத் தேசியமாக்க துடிக்கும் அவர்களின் சர்வாதிகாரத் தலைமையில் ஒத்த நெறிமுறைகளைக் கொண்டே உள்ளனர். கூட்டாட்சித் தத்துவத்திற்கு வழு சேர்க்கும் வகையில் மாநிலங்களுக்கு முழு உரிமைகளைக் கொடுத்து, அவர்களது தனித்துவமான மொழி கலாச்சாரத்திற்கு மதிப்பளித்து, கடைக் கோடிக் குடிமகனின் உணர்வுகளை உணர்ந்து, ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு வித்திடும் மக்கள் தலைவனே இன்றைய அரசியல் சூழலுக்கு தேவை." என்கிறார் சக்தி சரவணன்.

அவசியம் தேவை என்பது கென்ஸ் ராபர்ட்டின் கருத்து.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்