வாதம் விவாதம்: ''ஒரு திரைப்படத்திற்கு இவ்வளவு போராட்டமா?'

பத்மாவதி

இந்தி திரைப்படமான 'பத்மாவதி' வெளியாவதைத் தடை செய்ய வேண்டும் என்று ராஜபுத்திரர்களின் அமைப்புகளும், பல வலதுசாரி அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளதுடன் போராட்டமும் நடத்துகின்றன. அத்துடன் திரைப்படத்தில் நடித்த நடிகை தீபிகா படுகோனுக்கு மிரட்டல், உயிர் அச்சுறுத்தலும் வந்துள்ளது.

இந்நிலையில், பிபிசி சமூக வலைத்தளத்தில் நேற்றைய 'வாதம் விவாதம்' பகுதியில், அரசியல் கட்சிகளுக்கு அஞ்சி திரையுலகினர் தீபிகாவுக்கு ஒருமித்த ஆதரவு தர தயங்குகிறார்களா?சரித்திர அடிப்படையிலான கதை என்பதால் சர்ச்சையில் சிக்கிக்கொள்வோம் என்ற அச்சமா? என கேட்டிருந்தோம். அதற்கு நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே..

''பாஜக பாசிச சக்திகள் திரைப்படங்களைத் தொடர்ந்து குறி வைத்து தாக்குவது கண்டிக்கத்தக்கது. கலைகள் காக்கப்பட வேண்டும். கருத்துச் சுதந்தரம் வேண்டும். உயிருக்கு விலை வைத்து மிரட்டல் விடுப்போர் மீது காவல்துறை ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை? சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்ன?'' என ஜெயக்குமார் கூறியுள்ளார்.

''படம் பிடிக்கலையா வெளியிட தடை பண்ணுங்க, தடை போடுங்க, தடை உத்தரவு வாங்குங்க, அவ்வளவுதான்'' என ஜோஸ் பால் கருத்து தெரிவித்துள்ளார்.

''சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும். அவர்கள் இன்னும் வளர வேண்டும்'' என கணேஷ் கூறியுள்ளார்.

''ஒரு சாதாரண திரைப்படத்திற்கு இவ்வளவு போராட்டம் பண்ணும் அமைப்புகள் நாட்டில் உள்ள முக்கியமான பிரச்சைனைகளுக்கு ஏன் இந்த அளவு போராட்டம் பண்ணுவதில்லை ?'' என அருள் செல்வம் கேட்டுள்ளார்.

''தயங்குகிறார்கள் ஆளும்கட்சியினரை எதிர்க்க பயம்'' என சுரேந்தர் கூறியுள்ளார்.

''இந்த படத்தை தடை செய்து வரலாற்றை திரித்து படம் எடுப்பவர்களுக்கு ஒரு பாடமாய் அமைய வேண்டும்..'' சதீஷ் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :