#வாதம்விவாதம்: ''அதிமுக = அனைத்திந்திய மோடி முன்னேற்றக் கழகம்?''

படத்தின் காப்புரிமை Getty Images

ஒ. பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிகளும் ஒன்றாக இணைந்தபிறகும் இரு அணிகளுக்கும் இடையே சலசலப்பு தொடர்கிறது.

இந்நிலையில் இதற்கு, 'இணைந்தவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்பது காரணமா? அல்லது பாஜகவின் ஆதிக்கத்தால்தான் அதிமுகவில் குழப்பம் தொடர்கிறதா?' என பிபிசியின் சமூக வலைதளத்தில் நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். அதற்கு நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே..

''எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்பது மட்டுமே இவர்களின் வேதனை. மற்றபடி பிஜேபியின் அடக்குமுறை பெரிய விஷயமில்லை'' என ஷேக் தாவூத் கூறியுள்ளார்.

''கேட்டது கிடைச்சுது ஆனால் கிடைக்கவில்லை. ஒரு பொம்மலாட்டம் நடக்குது'' என யோக் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

''சொன்னது கிடைக்காமல் போயிருக்கும்'' என சேகர் கூறுகிறார்.

''அனைத்திந்திய மோடி முன்னேற்றக் கழகம்'' என சுலைமான் தனது கருத்தை கூறுகிறார்.

பிற செய்திகள்

.சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்