“மக்கள் திருந்தினால் அரசியல்வாதிகள் திருந்துவார்கள்”

டெம்பிளேட்

அரசியல் கட்சிகளின் பணப்பட்டுவாடா குற்றச்சாட்டால் தள்ளிவைக்கப்பட்ட ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் நியாயமான தேர்தல் நடைபெறுவதை தேர்தல் ஆணையத்தால் உறுதி செய்ய முடியுமா?

அரசியல்வாதிகளும் மக்களும் திருந்தாவிட்டால் `ஓட்டுக்கு நோட்டு ' என்ற முறைகேட்டைத் தடுக்க முடியாது என்ற வாதம் சரியா? என்று ‘வாதம் விவாதம்‘ பகுதியில் கேட்டிருந்தோம்.

இது பற்றி ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டரில் நேயர்கள் தெரிவித்த கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றோம்.

அருளப்பா எம்ஜே என்ற நேயர், "தேர்தல் ஆணையத்தின் மீது அத்தகைய நம்பிக்கை எப்படி வரும். ஏற்கனவே அத்தகைய குற்றச்சாட்டின் பெயரால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள், அந்தக் கட்சியினர் மீது என்ன நடவடிக்கையை கமிஷன் எடுத்தது. தற்போது சின்னம் ஒதுக்கீட்டில் கூட அது நியாயமாக நடந்து கொண்டதுபோல் தெரியவில்லை. நீதிமன்ற அழுத்தத்தின் காரணமாக டிசம்பருக்குள் தேர்தல் அறிவிப்பு. உடனே சின்னம் ஒதுக்கீடு. இருக்கும் அமைப்பில் மாற்றங்கள் இல்லாதபோது, மக்களிடம் மட்டும் மாற்றம் எதிர்பார்க்க முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

சக்தி சரவணன் டி என்ற நேயரோ, "குடவோலை முறை" ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகில் முதல் மக்களாட்சிக் கண்ட இனம், "தமிழினம்". ஆனால் இன்று தேர்தல் செலவுகளுக்கு உச்சவரம்பு நிர்ணயிப்பது, முதலீடு செய்து வெல்வது, முதலீடு இட்ட தொகையை விடப் பன்மடங்கு பதவியின் மூலம் ஈட்டுவது என்று தேர்தல் ஓர் தொழிலாக மாறிவிட்டது. உத்திரமேரூர் கல்வெட்டில் குறிப்பிடுவது போல் நேர்த்தியான வேட்பாளர் தகுதி நிர்ணயம் செய்வதன் மூலம் ஓட்டுக்கு நோட்டு என்ற முறைகேட்டை ஒழித்து நேர்மையான தேர்தலுக்கு வழிவகுக்கலாம்.

“அரசியல்வாதிகளும் திருந்த போவது இல்லை மக்களும் திருந்த போவது இல்லை” என்பது கண்ணன் பவானியின் கூற்று

இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கருத்தை பதிவிட்டு்ள்ள யுவராஜ் மக்கள் திருந்தினால் அரசியல்வாதிகள் திருந்துவார்கள் என்று எழுதியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Instagram

பிபிசி தமிழின் நேயர்கள் டுவிட்டரிலும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

தீபக் த மேன் என்ற நேயரின் பார்வையோ வேறுப்பட்டதாக உள்ளது.

பிஜேபிக்கு இதில் தொடர்புள்ளது என்று கருதுகிறார் ரெத்னவேல் பாண்டியன்.

மக்கள் திருந்தாத வரை நாடு திருந்தப்போவதில்லை என்று ஒன்றை வரி ஃபேஸ்புக் பதிவிட்டுள்ளார் முகமத் ஹாமு.

ஆர்.கே நகர் மக்களின் வீட்டில் பணமழையாகதான் இருக்க போகிறது என்பது வெங்கடேஷின் டுவிட்டர் பதிவு

திருடனாய் பார்த்து திருந்த வேண்டும் என்பது செந்தில் எம் ராபர்ட்டின் கருத்தாகும். மத்ரானும் இதே கருத்தை பகிர்ந்துள்ளார்.

அன்வர் என்ற நேயர் மத்திய அரசின் தலையீடு என்கிறார்.

தள்ளி வைக்கப்பட்ட தேர்தலை ஒட்டிய செயல்பாடு எங்கே என்று டுவிட்டர் பதிவில் கேட்கிறார் சங்கர் வேலுசாமி.

மொத்த தமிழ்நாட்டுக்கே தேர்தல் வைக்கனும் என்று ஃபேஸ்புக்கில் பரிந்துரைத்துள்ளார் ரவி சந்திரன்.

பாலாஜி ராஜேந்திரன் என்ற நேயரோ “வறுமை ஒழிய வேண்டும் இல்லை சட்டம் கடுமையாக வேண்டும். குடிமகன் என்ற தகுதியை இழக்கும் படி சட்டம் வேண்டும்‘ என்கிறார்.

மக்கள் மாற வேண்டும் என்று கூறுகிறார் செந்தில் குமார்.

எஸ் ஜெயபிரகாஷ் என்ற நேயர் தன்னுடைய டுவிட்டர் பதிவில், மத்திய அரசு என்ன வேண்டுமானாலும் செய்யும் என்கிறார்.

நோட்டாவுக்கு ஓட்டு அளிக்கலாமே என்பது முகமத் ரமீஸ் ராஜாவின் கருத்து.

வரும் தேர்தலில் இது நடக்காமல் அதிகாரிகள் பார்த்து கொள்வார்கள் என்று ஹரிஹரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஷேக்மீர் தமிழ்நாடு முழுவதும் தேர்தலை சந்திக்க தயாரா என்று சவால்விடுகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :