தொண்டர்களின் கண்ணீரால் நிரம்பிய மெரினா: ஜெயலலிதா இறுதிப்பயணத்தின் புகைப்படத் தொகுப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. அவரது இறுதி ஊர்வலத்தின் முக்கிய தருணங்களை புகைப்படங்கள் வாயிலாக வழங்குகிறது பிபிசி தமிழ்.

படக்குறிப்பு,

ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் பார்வைக்காக ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா உடலின் அருகே சசிகலா மற்றும் அவரது குடும்பத்தார்.

படக்குறிப்பு,

மறைந்த தமிழக முதல்வரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்கள் கூட்டம்

படக்குறிப்பு,

அப்போதைய தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

படக்குறிப்பு,

ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்கத்தில், அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கூடியிருந்தனர்.

படக்குறிப்பு,

''எனக்கென்று எதுவுமில்லை, எனக்கென்று யாருமில்லை தமிழக மக்கள் தான் எனக்கு எல்லாமே '' அதிமுக தொண்டர்களை உணர்ச்சி வெள்ளத்தில் தத்தளிக்க செய்யும் ஜெயலலிதாவின் வாசகம்.

படக்குறிப்பு,

தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு தமிழகத்தில் ஒரு வாரம் அரசு முறைத் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

படக்குறிப்பு,

பிரதமர் நரேந்திர மோதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய காட்சி.

படக்குறிப்பு,

பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் பூதவுடல் அருகே தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள்.

படக்குறிப்பு,

ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்வதற்காக அவரது உடல் ராஜாஜி அரங்கத்திலிருந்து மெரினாவை நோக்கி எடுத்து செல்லப்படுகிறது.

படக்குறிப்பு,

ஜெயலலிதா உடலுக்கு ராணுவ மரியாதை.

படக்குறிப்பு,

லட்சக்கணக்கான பொதுமக்கள், தொண்டர்கள் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

படக்குறிப்பு,

மெரினா கடற்கரையில் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடம்.