விழியும் இல்லை, விரலும் இல்லை: ஆதார் மறுப்பால் ஓய்வூதியம் நிறுத்தப்பட்ட தொழுநோயாளிக்கு திரும்பிய மகிழ்ச்சி

தன்னுடைய சொந்த பணத்தால் இனிமேல் இரண்டு குவளைகள் தேனீர் மேலதிகமாக வாங்கி குடிக்கலாம் என்ற நம்பிக்கையில் 65 வயதாகும் சஜிதா பேகம் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகிறார்.

படத்தின் காப்புரிமை BANGALORE NEWS PHOTOS

கடந்த நான்கு மாதங்களாக அவருக்கு கிடைக்க வேண்டிய ரூபாய் 1,000 முதியோர் ஓய்வூதியம் மறுக்கப்பட்டதை அறியும் வரை இந்த விடயம் அசாதாரண ஒன்றாக தோன்றாது.

சமூக நல திட்டங்களின் பயன்களை பெறுவதற்கு ஒவ்வொரு இந்தியரும் கொண்டிருக்க வேண்டும் என்று கூறப்படும் அடையாள அட்டையாகிய ஆதார் அட்டை சஜிதா பேகத்திடம் இல்லாமல் போனதே இதற்கு காரணமாகும்.

பெங்களூரு தொழுநோய் மருத்துவமனையில் தங்கியிருந்து மருத்துவ சிகிச்சை பெறுகின்ற 7 நோயாளிகளில் சஜிதாவும் ஒருவர். ஆதார் அட்டையில் மிக முக்கியமாக இருக்க வேண்டிய இரண்டு பயோமெட்ரிக் அடையாளங்களான கருவிழி மற்றும் கைரேகை இரண்டும் இவருக்கு இல்லை.

"இந்த மருத்துவமனை 2 குவளைகள் தேனீரையும், 3 வேளை சாப்பாடும் எங்களுக்கு வழங்குகிறது. ஆனால், மேலதிகமாக 2 குவளை தேனீர் குடிக்க விரும்புகின்றேன். சிலவேளை சிறியதொரு தட்டு கோழி கபாப் வாங்கி உண்ண நினைக்கிறேன்" என்று சஜிதா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்து கொள்ளாத சஜிதாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து வயது முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

படத்தின் காப்புரிமை BANGALORE NEWS PHOTOS

ஆதார் அட்டை இல்லாவிட்டால் ஓய்வூதியம் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்று சில வாரங்களுக்கு முன்னால், உள்ளூர் மாவட்ட அதிகாரி ஒருவர் மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ) அதிகாரிகளிடம் இது பற்றி மருத்துவமனை நிர்வாகம் பேசியுள்ளது. ஆனால், அவர்கள் நடவடிக்கை எடுக்க கொஞ்சம் காலம் ஆகியுள்ளது.

"இந்த தொழுநோயாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியம் மறுக்கப்பட்டுள்ளது பற்றி உள்ளூர் செய்தித்தாள் செய்தி வெளியிட்ட பின்னர், இந்த மருத்துவமனையில் நிரந்தரமாகத் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்ற 7 பேருக்கும் ஆதார் அட்டைகள் வழங்குவதற்கான முகாமை யுஐடிஏஐ நடத்தியது" என்று 100 படுக்கை வசதியுள்ள தொழுநோய் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி மருத்துவர் ஐயூப் அலி கான் சாய் தெரிவித்தார்.

தன்னுடைய பெயரை தெரிவிக்க விரும்பாமல் பிபிசியிடம் பேசிய யுஐடிஏஐ அதிகாரி ஒருவர், நாட்டிலுள்ள எல்லா தொழுநோயளிகளுக்கும் நாங்கள் ஆதார் அட்டை வழங்கியுள்ளோம். இத்தகையோர் சட்டத்தில் விதிவிலக்கு பெறுபவர்கள். இதற்கும் நம்மிடம் வழிமுறை உள்ளது" என்று கூறினார்.

தொழுநோயாளியின் கைரேகைக்கு பதிலாக மருத்துவரின் கைரேகை ஏற்றுக்கொள்ளப்பட்டு, தொழுநோயாளிகளுக்கு ஆதார் அட்டை வழங்கப்படுவதாக இந்த அதிகாரி தெரிவித்தார்.

ஆச்சரியப்படும் விதமாக நேற்று திங்கள்கிழமை சஜிதா அக்டோபர் மாத முதியோர் ஓய்வூதிய திட்டத்தொகையை பெற்றிருக்கிறார். மீதமுள்ள மாதங்களின் ஓய்வூதியங்களும் கூடிய சீக்கிரம் சஜிதாவை வந்தடையும் என்று நம்புவதாக மருத்துவர் ஸாய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நீங்கள் இறந்தது எப்படி? எப்போது?: 'ஜெயலலிதா'விடம் கேள்வி கேட்கும் மக்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உங்கள் மரணத்தில் மர்மம் உள்ளதா?: ஜெயலலிதாவிடம் கேட்கும் மக்கள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :