திருமாவளவனின் கருத்தை வைத்து ஆதாயம் தேட முயற்சியா?

பௌத்த விகாரைகளை இடித்துவிட்டுத்தான் சைவ, வைணவக் கோயில்கள் கட்டப்பட்டன என்ற திருமாவளவனின் கருத்து, வரலாற்று அடிப்படையிலானதா?, அரசியலுக்காகப் பேசப்பட்டதா? என்று பிபிசி நேயர்களிடம் வாதம் விவாதம் பகுதியில், கேட்டிருந்தோம்.

படத்தின் காப்புரிமை FACEBOOK

அதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் சமூக வலைதளங்களில் பதிவிட்ட கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றோம்.

ஃபேஸ்புக் நேயர் சன்தானா கிருஷ்ணன், “திருமாவளவன் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கு பல கோடி வரலாறு உண்மை தன்மை இருக்கும். ஜாதி கடந்த பார்த்தால் அது தெரியும் தோழர்களை” என்று பதிவிட்டுள்ளார்.

அருண் குமார் என்பவர், “அவர் முனைவர், எதையும் ஆதாரத்தோடு, வரலாற்று தரவுகளோடு பேசுபவர். ஆதாயத்திற்காக பேசி பிழைப்பு நடத்துபவர் அல்ல. இது உண்மை. ஒரு இனத்தின் விடுதலையை முன்னெடுத்துச்செல்லும் அர்ப்பணிப்புள்ள தலைவர். நினைவிலும் செயலிலும் பெருந்தன்மையுடன் வாழ்பவர். நடுநிலையுடன் பார்த்தால் அவர்தான் சரியான தலைவர்” என்று புகழ்ந்து பதிவிட்டு்ள்ளார்.

“மதுரையில் கழுவிலேற்றப்பட்ட சமணர்கள் யாரால் எதற்காக கொல்லப்பட்டனர் என்பதனை நடுநிலையாளர்கள் ஆய்ந்து பார்ப்பார்களேயானால் இது வரலாறா - அரசியலா என்பது புலப்படும். எது எவ்வாறாயினும் எம் தமிழ் மண் தொடர்ச்சியான மதமாற்றங்களால் 5000 ஆண்டுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்டு இன்று சுயம் இழந்து நிற்கின்றது என்பதே உண்மை” என்கிறார் அலெக்ஸாண்டர் பன்னீர் செல்வம்.

வேணு மணிகண்டன் என்ற நேயர், “சைவத்தின் மற்றும் வைணவத்தின் தோற்றம் எப்போது புத்த மதம் எப்போது தோன்றியது எப்போது எது இந்த மண்ணில் விளைந்த சமயம், எது வெளியே இருந்து வந்த மதம் என்பது குறித்து ஆய்வு செய்தல் வரும் பகுப்பாய்வு செய்தலே தெரியும்.” என்று கூறுகிறார்.

“வாதத்திற்காக அவர் கூறியதை வெகுஜன எதிர்ப்பு காரணியாக மாற்றி குளிர்காய முயல்கின்றனர். அவர் கருத்தில் தவறில்லை. இந்த கருத்து உணர்ச்சியின் மேல் அல்லாமல் வரலாற்று ரீதியாக சிந்தித்து விவாதிக்க வேண்டிய ஒன்று இந்தியாவிலேயே தோன்றி தழைத்த ஒரு மதம் ஏன் எப்படி இந்நாட்டில் வேரறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது” என்று கேள்வி எழுப்புகிறார் பரமசிவன் தாமரைசெல்வன்.

100% ஓட்டுக்கான வாதம் என்பது காத்திகை செல்வன் நேயரின் பதிவு.

சிவா தாமோதரன் என்பவரோ, “அவரவர் நம்பிக்கையில் தலையிடுவது தேவையற்றது” என்று கூறியுள்ளார்.

சுந்தர பாண்டியன் இது வெறும் அரசியலே...என்கிறார்

திருமாவளவனின் இந்த கருத்து பற்றி தெரிவித்திருக்கும் கார்த்திக் பாபி, “வரலாற்று அடிப்படையிலானது? தவறு என்பவர்கள் நிரூபிக்க முடியாததால் திருமாவை குறை கூறுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

ராமசந்தஜிரன் பார்த்தசாரதி என்கிற நேயர், “எந்த மதத்தினரையும் புண்படுத்தும் வகையில் பேசுவது ஏற்புடையதல்ல. திருமாவளவனின் பேச்சு கண்டிக்கத்தக்கது” என்று ஃபேஸ்புக் பதிவிட்டுள்ளார்.

வரலாற்று அடிப்படையில் தானே பேசியுள்ளார் என்று ஆமோதிக்கார் ஸ்பார்டான் என்பவர்.

வினோத் மகாலிங்கம், “இது அரசியலுக்காக பேசப்பட்டது. எனவே ஏற்பதற்கில்லை என்கிறார்.

இதனை ஆதரிக்கவோ மறுக்கவோ ஆய்வாளர்களால் மட்டுமே இயலும். மற்றவை அரசியல் மட்டுமே என்பது பிரசன்னாவின் கருத்து.

இதனை வரலாற்று ஆய்வாளர்களே கூற முடியும் என்கிறார் கா.விஜயந்திரமணி

கட்டிடங்களை தகர்ப்பது தத்துவங்களை தகர்த்து விடாது என்ற உண்மை புரிதலுக்குரியது என்கிறார் உதயகுமார்.

அவர் காவி தீவிரவாதம் செய்வதை தானே எதிர்க்கிறார் என்பது அனல் ராஜ் என்பவரின் வாதமாக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :