காங்கிரஸ் கட்சி மீண்டெழ ராகுல் கைகொடுப்பாரா?

காங்கிரஸ் கட்சியை, ராகுலால் புதுப்பிக்க முடியுமா? படத்தின் காப்புரிமை Reuters

நாட்டில்,தொடர்ந்து அரசியலுக்கு சம்மந்தப்பட்ட கட்சியாகவே இருக்க அக்கட்சி போராடிவரும், அதேவேளையில், 132 ஆண்டுகள் பழமையான காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்கிறார் ராகுல் காந்தி.

தலைவர் பதவிக்கு ராகுல்காந்தி விண்ணப்பித்த பிறகு, திங்கட்கிழமை அவரின் நியமனம் உறுதி செய்யப்பட்டது. அவருக்கு எதிராக யாரும் போட்டியிடவில்லை. அவர் முறைப்படி, டிசம்பர் 16 ஆம் தேதி பதவியேற்பார்.

நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில், இந்தியாவின் மிகப்பெரிய எதிர்கட்சியான காங்கிரஸ், 20 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளையே பெற்றிருந்தது.

543 நாடாளுமன்ற இடங்களில் 44 இடங்கள், அதாவது வெறும் 8 சதவிகித இடங்களையே அது பெற்றிருந்தது. இதுவரை இருந்ததிலேயே மோசமான வெற்றி இதுவாகும்.

அந்த தேர்தல் முதல், காங்கிரஸ் இதுவரை ஆறு மாநில தேர்தல்களில் தோற்றுள்ளது. தற்போது காங்கிரஸ், கர்நாடகம் மற்றும் பஞ்சாப் ஆகிய இரு பெரிய மாநிலங்களிலும், மூன்று சிறிய மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ளது. குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல்களை பொருத்தவரை அதன் நிலை சற்று கலந்தே உள்ளது.

கிராமங்களிலும், நகரங்களிலும் கூட்டம் கூட்டமாக, வாக்காளர்கள் பிரிந்து சென்றனர். 2009 -2014-ஆம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் கட்சி, 9 சதவிகித்திற்கும் அதிகமான வாக்காளர்களை இழந்தது.

படத்தின் காப்புரிமை AFP

`காங்கிரஸ், சொந்த சமூகத்தொகுதி பறிக்கப்பட்ட கட்சி` என்று கூறுகிறார், அரசியல் விமர்சகரான சுஹாஸ் பல்ஷிகர்.

தோல்வியடைந்த மாநிலங்களில், மீண்டெழ வேண்டுமென்றாலும் கூட, இந்த கட்சி, தோல்வி அடைவதில் அழிக்கமுடியாத புகழை பெற்றுள்ளது.

1962 தேர்தலுக்குப் பிறகு, தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்காத்தும், 1977க்குப் பிறகு மேற்கு வங்கத்தில் வெற்றிபெற முடியாததுமே இதற்கான சிறந்த உதாரணங்கள்.

சமீப தேர்தலிகளில், காங்கிரஸ் தோல்வியை தழுவிய முக்கிய மாநிலங்களான உத்திர பிரதேசம் மற்றும் பிகாரிலும் இதேநிலை வரும் என்பது போலவே தெரிகிறது.

ஆக, 47 வயதாகும் ராகுல்காந்தியால், சக்தியிழந்த கட்சியின் நிலையை மாற்றமுடியுமா?

13 ஆண்டுகளுக்கு முன்பு பொதுவாழ்க்கைக்கு வந்த ராகுல்காந்தி, தங்கள் குடும்பத்திற்கு எப்போதும் வெற்றியளிக்கும் அமேதி தொகுதியில் நின்று வெற்றிபெற்றார்.

அதுமுதல், அவர், அரசியலில், தயக்கமான, ஒதுங்கி நிற்கக்கூடிய, ஆர்வமற்ற ஒரு அரசியல்வாதியாகவே இருந்து வருகிறார்.

சோனியா காந்தி, கட்சியின் செயல்பாடுகளில் முன்னேற்றங்களை கொண்டுவராத நிலையில், 2013 ஆம் ஆண்டு, கட்சியின் இரண்டாவது மூத்த தலைவரானார் ராகுல்காந்தி.

கட்சியின் முக்கிய விஷயங்களில் சீர்திருத்தங்களை கொண்டுவந்து, இளைஞர் காங்கிரஸை உயிர்ப்பிக்க செய்வதன் மூலம், ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல கட்சியை நடத்தினார்.

படத்தின் காப்புரிமை AFP

ஆனாலும், கட்சியின் வளர்ச்சி வியக்குமளவிற்கு இல்லாமல், சரிவு தொடர்ந்துகொண்டே இருந்தது.

பின்பு, சில மாதங்களுக்கு முன்பு, ஏதோ ஒன்று நடந்தது. கடந்த செப்டம்பர் மாதம், அமெரிக்காவிற்கு பயணித்த ராகுல், மாணவர்களையும், சிந்தனையாளர்களையும், அரசுத் தலைவர்களையும், ஊடகவியலாளர்களையும் சந்தித்து பேசினார். அவர்களின் பல கேள்விகளை எதிர்கொண்டார்.

தனது தடைகள் குறித்து தானே பேசினார். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் பேசிய அவர், தன்னைவிட மோடி மேம்பட்ட தொடர்பாளர் என்று கூறினார்.

அவரின் சமூக வலைதள பிரசாரங்கள் சூடுபிடிக்க தொடங்கின. தற்போது, மிகவும் ஆச்சரியகரமான வகையில் புத்துணர்வுடனும், மிகவும் திறந்த எண்ணங்கள் கொண்டவராக ராகுல் இருக்கிறார்.

அவரின் தாயாரின் உடல்நிலை குறித்தும், தனது நாயை காட்சிபடுத்தி அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவுகள், சமூக தளங்களில் அதிகம் பரவின.

அதிக பிரிவுகள் நிறைந்த, பல தலைவர்களை களத்தில் கொண்டுள்ள குஜராத் தேர்தலிலும், ராகுல், மிகவும் துடிப்புடன் களமிறங்கியுள்ளது போலவே தெரிகிறார்.

துல்லியமாக, மக்களை குறிவைக்கும் வகையில், அவர்களை தன்வசம் இழுக்கக்கூடிய வகையில் அவர் பேசினார். வேலையின்மை, பண மதிப்பிழப்பு, நாட்டில் அமைதியின்மை அதிகரிப்பது, மந்தமடைந்துவரும் பொருளாதாரம் மற்றும் மோடி அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகள் ஆகியவை குறித்து பேசினார்.

ராகுலின் சுயசரிதையை எழுதிய ஆர்த்தி ராமச்சந்திரன், `ராகுல் வாக்காளர்களுடன் பேசுவதற்கு ஆர்வமாக உள்ளது போலவே தெரிகிறது` என்று குறிப்பிடுகிறார்.

அவரின் உற்சாகம், கட்சியில் ஒரு நல்ல திறனை ஒரு அளவிற்கு உருவாக்கியுள்ளது என்றாலும், தேர்தல்களை வெற்றிபெற ஆரம்பிக்க அவருக்கு இன்னும் அரசியல் நுணுக்கங்களும் யுக்திகளும் தேவை.

படத்தின் காப்புரிமை AFP

சீர்திருத்தங்கள் குறித்த வெற்றுரைகளை கேட்டு குழம்பிப்போயுள்ள இளைய இந்தியாவிற்கு, வருங்கால இந்திய பொருளாதாரம் குறித்த தெளிவான ஒரு பார்வையை அவர் அளிக்க வேண்டும்.

மக்களை கவர்ந்திழுக்கக்கூடிய, சுத்தமான உள்ளூர் தலைவர்களை அவர் கண்டறிந்து ஊக்குவிப்பதோடு, வெற்றியளிக்கக்கூடிய மாநிலக்கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அவர்கள் மேன்மையான முறையில் ஆட்சி செய்கிறார்களா என்பதையும் அவர் உறுதி செய்யவேண்டும்.

`இந்தியாவின் மாறும் போட்டிகள் நிறைந்த அரசியல்` யுக்திக்கு, தங்களை மாற்றிக்கொள்ள முடியாதபோதே, காங்கிரஸ் கட்சி தங்களின் சூழலை இழந்துவிட்டது என்று பல்ஷிகர் கூறுகிறார்.

அந்த புதிய யுக்தியின் போதுதான், நாடு, அதிகாரமிக்க ஒரு கட்சி ஆளும் நாடாக இருந்த நிலையிலிருந்து, `மேலும் தூய்மையான பல கட்சிகளின் போட்டி` நிறைந்த நாடாக மாறியது. இந்த மாற்றம், அரசியல் வெற்றிக்கு ஒரு முக்கிய விஷயமாக அமைந்தது.

காங்கிரஸ் கட்சி, ஊழல் வழக்குகளில் பாதிக்கப்படாதவர்களாக தங்களை நிலைநிறுத்திகொள்ள வேண்டும். காரணம், ஆட்சியிலிருந்த போது, பல ஊழல் வழக்குகள் காங்கிரஸ் கட்சியின் பெயரை சிதைத்துள்ளன.

சக்திவாய்ந்த மோடியையும், அவரின் மிகவும் துரிதமான அரசியல் கட்சியையும் வீழ்த்த, இவை எல்லாமும், இன்னும் அதிகமானவையும், ராகுலிற்கு தேவைப்படுகிறது.

அவரின் குடும்ப பாரம்பரியத்தைக் குறிப்பிடும் பலரும், போராடும் எண்ணமே ராகுலுக்கு பெரிய சவாலாக இருக்கும் என்கின்றனர்.

மிகவும் சாதாரண குடும்பத்திலிருந்து வந்ததை, தனது அரசியலுக்கான முக்கிய ஆதாயமாக மாற்றிக்கொண்ட, மோடியை பலரும் குறிப்பிடுகின்றனர். குடும்ப அரசியல் குறித்த அமெரிக்க மாணவர்கள் கேட்டதற்கு, இந்தியா ராஜ்ஜியங்களாலேயே முன்னெடுத்து செல்லப்பட்டது என்று அவர் பதிலளித்தார். `அவ்வாறே நாடு இயங்குகிறது` என்று கூறினார்.

`சிறுபான்மையினரை திருப்திப்படுத்துதல்`

அது மிகவும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம் மட்டுமல்ல, ராகுல்காந்தி அதை சரியாகவே கூறியுள்ளார். மாநிலக்கட்சிகள் வாரிசு அரசியல் வழியாகவே நடக்கின்றன. இதில், பாஜகவும் விட்டுவைக்கப்படவில்லை.

படத்தின் காப்புரிமை AFP

டெல்லியை இடமாகக் கொண்டு இயங்கும், வளர்ந்துவரும் சமூகம் பற்றிய கல்விக்கான மையத்தின்(சி.எஸ்.டி.எஸ்) இயக்குநரான சஞ்சய் குமார், ''இந்திய வாக்காளர்கள், தலைவர்களின் வாரிசுகளுக்கு வாக்களிக்க விரும்பவில்லை என்பதை ஆய்வு முடிவுகள் தொடர்ந்து வெளிப்படுத்துகின்றன'' என்று கூறுகிறார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிக வாக்காளர்கள் விலகியதற்கு காரணம், ''அக்கட்சி, சிறுபான்மையினரை சமாதானப்படுத்தும் வகையில் வளர்ந்துவருவது போன்ற ஒரு பிம்பத்தை அளித்ததே'' என்று சஞ்சய் கூறுகிறார்.

2014இல், இந்தியாவின் பெரும்பான்மையான இந்துக்களின் வாக்குகளில் 16 சதவிகிதம் மட்டுமே காங்கிரஸ் பெற்றிருந்தது. 2014இல், சி.எஸ்.டி.எஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், 10 காங்கிரஸ் வாக்காளர்களில், ஆறு பேர் இஸ்லாமியராகவோ, பழங்குடியினராகவோ, சீக்கியர் அல்லது கிருஸ்துவராகவோ இருக்கிறார்கள்.

ஆனால், இந்த கணக்குப்படி பாஜகவில் 10 பேரில் மூவர் மட்டுமே இவர்கள் இருக்கிறார்கள்.

''இந்துத்துவாவின் நகலாக மாறாமல், இந்துக்களின் எண்ணங்களையும், மனதையும் வெல்வதும், இந்துக்களை அந்நியப்படுத்தாமல், இந்து தேசியவாதத்தை எதிர்ப்பதுமே அவரின் பெரிய சவாலாக இருக்கும்'' என்று கூறுகிறார் டெல்லியை சேர்ந்த ஆய்வாளரான அஜஸ் அஷ்ரஃப்.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மாநிலங்களின் தேர்தல்களில், ராகுலின் திறன் சோதிக்கப்படும். ''அவர் மீதுள்ள பார்வையை மாற்றுவதற்கு, ராகுலுக்கு ஒரு நல்ல தேர்தல் வெற்றி தேவைப்படுகிறது'' என்கிறார் சஞ்சய்.

இன்னும் அழுத்தமளிக்கக்கூடிய கேள்விகள் உள்ளன. 2019ஆம் ஆண்டு தேர்தலில், பிரதமர் வேட்பாளர் ஆவாரா ராகுல்? அல்லது கட்சியை கட்டிக்காத்து, சரியான நேரத்தில், ஒரு பிரதமர் வேட்பாளர் உருவாக வழிவகுப்பாரா?

காங்கிரஸ் குறித்து புத்தகம் எழுதியுள்ள ஸோயா ஹசன், ''தன்னிடமுள்ள அனைத்து தவறுகளோடும், காங்கிரஸ் இந்தியாவின் விரிவடைந்த மூளையின் யோசனைக்கான பிரதிநிதியாக தெரிகிறது'' என்று நம்புகிறார்.

ஆனாலும், எந்த சித்தாந்தமும், யுக்தியும் இல்லாத ஒரு கட்சி என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.

அக்கட்சி, தொடர்ந்து முன்னெடுத்துசெல்ல ஒரு சித்தாந்தம் உள்ளது என்றால், அது ''ஆட்சிக்கான சித்தாந்தம் தான்'' என்று கூறுகிறார்.

காங்கிரஸ் செய்த அதே தவறுகளை மோடியும் செய்வதற்காக காத்திருப்பது என்பதே, வருங்காலத்தை கைப்பற்ற ராகுல்காந்தி வைத்துள்ள ஒரு சிறந்த வழியாக தெரிந்தாலும், அவர் மேல்நோக்கிய கடினமான ஒரு சண்டையை எதிர்கொள்கிறார் என்பது மட்டும் தெளிவாகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :