அனுஷ்கா ஷர்மாவை மணந்தார் விராட் கோலி!

அனுஷ்கா ஷர்மாவை மணந்தார் விராட் கோலி படத்தின் காப்புரிமை TWITTER@https://pbs.twimg.com/media/DQxnbQKUQAA0XR
Image caption அனுஷ்கா ஷர்மா - விராட் கோலி திருமணம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மாவை இத்தாலியில் இன்று திங்கட்கிழமை திருமணம் செய்துகொண்டார்.

கடந்த சில வருடங்களாகவே இவர்களது காதல் வாழ்க்கை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில், இருவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தின் காப்புரிமை TWITTER@https://pbs.twimg.com/media/DQxncQUVoAEnHG
Image caption இன்று நாம் ஒருவருக்கொருவர் என்றென்றும் அன்புடன் பிணைக்கப்பட்டிருப்போம் என்று உறுதியளித்தோம்

இது குறித்து இருவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

'' இன்று நாம் ஒருவருக்கொருவர் என்றென்றும் அன்புடன் பிணைக்கப்பட்டிருப்போம் என்று உறுதியளித்தோம்.

உங்களுடன் இந்த செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்கு உண்மையிலேயே நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம்.

இந்த அழகான நாள் எங்கள் ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் அன்பு மற்றும் ஆதரவோடு மிகவும் சிறப்புமிக்கதாக இருக்கும்.

எங்கள் பயணத்தில் முக்கிய பங்கு வகித்தமைக்கு நன்றி''

என்று அதில் கூறப்பட்டிருந்தது.

படத்தின் காப்புரிமை TWITTER@https://pbs.twimg.com/media/DQxlgkwUQAAJC9
Image caption சுற்றமும், நட்பும் சூழ...

இவர்களுக்கு பல்வேறு பிரபலங்களும் நண்பர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

தொடர்புடைய தலைப்புகள்