ஆணுறை விளம்பர ஒளிபரப்பு கட்டுப்பாடு இந்தியாவில் மட்டுமா?

  • 12 டிசம்பர் 2017

ஆணுறை பற்றிய அனைத்து விளம்பரங்களையும் இரவு 10 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என்ற அறிவுறுத்தலை கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption மேன்ஃபோர்ஸ் ஆணுறை நிறுவனத்தின் விளம்பர தூதராக உள்ள சன்னி லியோன்

இந்த ஆணை ஊடகங்களின் ஒளிபரப்பில் அரசின் கட்டுப்பாடு மற்றும் பிறரை அதிகமாக பாதிக்கும், பாதிக்காத உள்ளடக்கம் பற்றிய எல்லை என்ன என்பது பற்றிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

வயதுவந்தோருக்கான உள்ளடக்கங்களை தொலைக்காட்சியில் எப்போது வழங்க வேண்டும் என்பதற்கான கட்டுப்பாடு குறித்த உலக அளவிலான சில எடுத்துக்காட்டுக்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பிரிட்டன் வாட்டர்ஷெட்

பிரிட்டனில் தொலைக்காட்சிகளில் வயதுவந்தோருக்கான உள்ளடக்கங்களை எந்த நேரத்துக்குப் பிறகு ஒளிபரப்பவேண்டுமோ அந்த நேரம், "வாட்டர்ஷெட்" என்று அழைக்கப்படுகிறது.

இலவச அலைவரிசைகள் குழந்தைகளுக்கு முற்றிலும் பெருத்தமற்ற உள்ளடக்கங்களை இரவு 9 மணியில் இருந்து அடுத்த நாள் அதிகாலை 5.30 மணிவரை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும்.

கட்டணம் செலுத்தி பார்க்க வேண்டிய அலைவரிசைகளில் வாட்டர்ஷெட் உள்ளடக்கங்கள் இரவு 8 மணி முதல், அடுத்த நாள் காலை 6 மணி வரை ஒளிபரப்ப வேண்டும் என்ற நியதி உள்ளது.

இந்த ஒழுங்குமுறை மோசமான மொழியை பயன்படுத்துவது அல்லது தீவிர வன்முறை உள்ளடக்கங்களை கொண்டுள்ள நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும்.

பிரிட்டன் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான ஆஃப்காம் நடத்திய ஆய்வுப்படி 74 சதவீத பொது மக்களும், 78 சதவீத பெற்றோரும் இரவு 9 மணி என்பது வயது வந்தோருக்கான வாட்டர்ஷெட் விடயங்களை ஒளிபரப்புவதற்கு சரியான நேரம் என்று தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

இரவு 9 மணிக்கு முன்னால் உள்ளூர் ஒளிபரப்பு அலைவரிசைகளில் ஒளிபரப்பக்கூடிய அனைத்து வாட்டர்ஷெட் நிகழ்ச்சிகளும் குழந்தைகள் பார்ப்பதற்கு ஏற்றவையாக அமைய வேண்டும் என்ற கொள்கையை பிபிசி கடைபிடித்து வருகிறது.

"பார்வையாளர்களை உணர்ச்சிப்பூர்வமாக கவரக்கூடியதாக இருக்கும் உள்ளடக்கங்களை வயதுவந்தோருக்கான வாட்டர்ஷெட் உள்ளடக்கங்களுக்க மிகவும் நெருக்கமான நேரத்தில் இடம்பெறச் செய்யக்கூடாது" என்றும் பிபிசியின் கொள்கை குறிப்பிடுகிறது.

விளம்பரங்கள் பொது நாகரிகத் தரத்துக்கு ஏற்ப அமைய வேண்டும். புகார் ஏதுமிருந்தால் விளம்பரத் தர முகமை என்னும் அமைப்பு விசாரிக்கும். பாலுறவுக் காட்சிகள் போன்ற ஆட்சேபத்துக்குரிய காட்சிகளைக் கொண்ட விளம்பரங்கள் இருப்பதான புகார்களை இந்த அமைப்பு விசாரிக்கும்.

அமெரிக்காவின் பாதுகாப்பு புகலிட நேரம்

அமெரிக்காவின் மத்திய தகவல் தொடர்பு ஆணையம் (ஃஎப்சிசி) தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான தரக் கட்டுப்பாடுகளை வழங்கியுள்ளது.

அருவருப்பான உள்ளடக்கங்கள் எதுவும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒளிப்பரப்பக்கூடாது என்று ஃஎப்சிசி விதிமுறைகள் குறிப்பிடுகின்றன. இந்த நேரம் "பாதுகாப்பான புகலிட நேரங்கள்" என்று குறிப்பிடப்படுகின்றன.

படத்தின் காப்புரிமை MANFORCE CONDOMS

பாலியல் தொடர்பான அல்லது தரங்குறைந்த உள்ளடக்கங்களை, அருவருப்பான உள்ளடக்கங்கள் என்று ஃஎப்சிசி விதிகள் வரையறுக்கின்றன.

முதல் சீர்திருத்த விதிகள் (கருத்து சுதந்திரம்) மூலம் அருவருப்பான உள்ளடக்கங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதால் அவற்றை முழுமையாக தடைசெய்துவிட முடியாது.

ஆனால், இந்த நிகழ்ச்சிகளை பார்க்கின்ற பார்வையாளர்களில் குழந்தைகள் இருக்கலாம் என்பதை கவனத்தில் கொண்டு ஒளிபரப்பு மணிநேரங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

ஒளிபரப்பில் வெறுப்பூட்டும் மொழி இருப்பதை முற்றிலும் தடை செய்யவில்லை. இது தொடர்பில் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஃஎப்சிசி தனித்தனியாக முடிவு செய்கிறது.

குழந்தைகளுக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்பதை வைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தரம் வரையறுக்கப்படுகிறது.

அவை டிவி ஒய் (TV-Y குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வழங்கப்படும் தரம்) முதல் டிவி-எம்ஏ (TV-MA - வயது வந்தோருக்கான நிகழச்சிகளுக்கு மட்டும் வழங்கப்படும் தரம்) வரை உள்ளன.

ஆபாசப் பேச்சு முதல் சீர்திருத்தத்தில் (கருத்து சுதந்திரம்) பாதுகாக்கப்பட்டவில்லை என்பதால் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கு உகந்ததல்ல என்று பொருள்படுகிறது.

குறிப்பிட்ட நேரத்தில் ஆணுறை மற்றும் பாலியல் சார்ந்த பண்டங்களின் விளம்பரத்தை ஒளிபரப்ப அமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் தடை ஏதும் விதிக்கவில்லை.

சீனா

தொலைக்காட்சி ஒளிபரப்பில் சீனா மிகக் கடுமையான மற்றும் மையப்படுத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளைக் கொண்டுள்ளது.

ஒளிபரப்பு மற்றும் தொலைக்காட்சி நிர்வாக சட்டத்தின் விதி எண் 32 இதை பற்றிய விதிகளை விவரிக்கிறது..

அருவருப்பு, மூடநம்பிக்கை அல்லது வன்முறையை வளர்க்கின்ற, நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி நிலையங்கள் தயாரிப்பதற்கும் ஒளிபரப்புவதற்கும் இந்த சட்டம் தடை விதிக்கிறது.

இந்த சரத்துக்கு அப்பாற்பட்டு தொலைக்காட்சி அல்லது வானொலியில் ஒளிப்பரப்பாகும் உள்ளடக்கங்களை ஒழுங்குபடுத்துவதற்கு பல்வேறுப்பட்ட பிற நிபந்தனைகளும் உள்ளன. ஆணுறைகள் மற்றும் பாலியல் தொடர்பான பண்டங்களின் விளம்பரம் தொடர்பாக குறிப்பான சட்டம் ஏதுமில்லை. ஆனால், அந்த விளம்பரங்கள் அருவருப்பு தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருக்கவேண்டும்.

ஆஸ்திரேலியா

ஒளிபரப்பு சேவைகள் சட்டம் 1992-யின் விதிமுறைகள்படி, குழந்தைகளை பாதிக்கின்ற நிகழ்ச்சிகளை இரவு 8.30 முதல் அடுத்தநாள் அதிகாலை 5 மணிவரை மட்டும் ஒளிபரப்பும் விதமாக ஆஸ்திரேலியா கட்டுப்படுத்தியுள்ளது.

நவராத்திரியின் போது சன்னி லியோனின் 'ஆணுறை' விளம்பரம் : குஜராத்தில் கொதிப்பு?

ஆணுறை நறுமணத்தின் ரகசியம் என்ன?

இத்தகைய உள்ளடக்கங்கள் பள்ளி நாள்களில் நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையும் ஒளிபரப்பலாம். இந்த மணிநேரங்களில் பொதுவாக குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்போராக இல்லாமல் இருப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வயது வந்தோருக்கான திரைப்படங்களை 2 தர நிலைகளில் வரையறுக்கின்றனர். எம் (M) தரம் வழங்கப்பட்டுள்ள திரைப்படங்களை தொலைக்காட்சிகளில் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை ஒளிப்பரப்பலாம். எம்ஏ15+ (MA15+ - வயது வந்தோருடன் பார்க்கப்பட வேண்டியவை) என்கிற தரம் வழங்கப்பட்டுள்ள திரைப்படங்களை இரவு 9 முதல் அதிகாலை 5 மணி வரைதான் ஒளிபரப்ப வேண்டும்.

மிகவும் வெளிப்படையாகவோ, பொருத்தமற்றதாகவோ இல்லாத நிலையில் அவை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படலாம். விளம்பர வழிகாட்டு நெறிமுறைகள் பாலுறவு சுகாதாரம் என்ற விஷயத்தை அங்கீகரிக்கிறது.

மகப்பேற்றின் போது மரணத்தை தடுக்க உதவும் ஆணுறை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மகப்பேற்றின் போதான மரணத்தை தடுக்க உதவும் ஆணுறை

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :