வாதம் விவாதம்: “விளம்பரங்களுக்கான நேரக்கட்டுப்பாடு வரவேற்கத்தக்கதே”

வாதம் விவாதம் படத்தின் காப்புரிமை JUNI KRISWANTO/AFP/Getty Images

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ஆணுறை விளம்பரங்களுக்கு மத்திய அரசு நேரக்கட்டுப்பாடு விதித்துள்ளது.

இந்நிலையில், குழந்தைகள் பார்க்க பொருத்தமற்றது என்ற கோணத்தில் கட்டுப்பாடு விதிப்பது சரியானதா? பாலியல் கல்வியும் தேவை எனக் கூறப்படும் நேரத்தில் இத்தகைய கட்டுப்பாடுகள் பலனளிக்குமா? என்று, வாதம் விவாதம் பகுதியில், பிபிசி தமிழ் நேயர்களிடம் கேட்டிருந்தோம்.

இது குறித்து மக்கள் அளித்துள்ள கருத்துக்களை தொகுத்து வழங்குகிறோம்.

"ஏனைய சமூகம் கண்டிராத எண்ணற்றப் பெண் புலவர்கள், களவியல், கற்பியல், காமத்துப்பால், அகவாழ்வு, புறவாழ்வு என வாழ்வியல் அறம் கண்ட தமிழ்ச் சமூகம் இன்று மரபின் சுவடு மறந்து செல்கிறது. இளைய பருவம் எய்தும் இளந்தலைமுறையினருக்கே பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வு அதிகம் தேவைப்படுகிறது. ஓர் குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி காணும் நேரங்களில் குழந்தை, பாலப் பருவத்தினரின் வயதுக்குத் தேவையற்ற விளம்பரங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பது மிகவும் வரவேற்கத்தக்கது."என்று கருத்து தெரிவித்துள்ளார், சக்தி சரவணன்.டி என்ற நேயர்.

கட்டுபாடு அளித்துள்ளது `சரியல்ல` என்று பதிவிட்டுள்ளார், ஜெ.பி மணி என்ற நேயர்.

"எங்களுடைய தமிழ் பெற்றோர் பெரும்பாலானோர் தொலைக்காட்சியில் நேரத்தை செலவழிக்கும்போது தங்கள் குழந்தைகளையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு தான் தொலைக்காட்சியைப் பார்க்கின்றார்கள். அந்தக்கோணத்தில் பார்க்கும்போது அவர்கள் செய்வது சரி என்று தான் தோன்றுகின்றது. அதேநேரத்தில் பாலியல் கல்வியும் தேவை என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால் அந்தக் கல்வி எந்தவிதமானதாக இருக்கவேண்டும் என்றால் ஒவ்வோரு வயதுப்பிரிவுக்கும் தகுந்தமாதிரி இருக்கவேண்டும். அந்த வயதுப்பிரிவுகூட நாட்டுக்குநாடு கலாச்சாரத்துக்கு கலாச்சாரம் காலத்துக்கு காலம் வேறுபடும். " என்று பதிவிட்டுள்ளார், மாற்றம், சேஞ்ச் என்ற நேயர்.

படத்தின் காப்புரிமை SEBASTIAN D'SOUZA/AFP/Getty Images

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்