நாடாளுமன்றத் தாக்குதல்: 16 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்ன?

பாராளுமன்றத் தாக்குதல்: 16 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்ன? படத்தின் காப்புரிமை Getty Images

2001 ஆம் ஆண்டு, டிசம்பர் 13ஆம் தேதி, நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டு இருந்தது.

பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து கடந்த சில தினங்களாக அதிகம் விவாதிக்கப்பட்டு வந்த சூழல் அது.

நாடாளுமன்ற வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஊடகவியலாளர்கள் பலர் இருந்தனர்.

அப்போது, நாடளுமன்றத்தில், பிரதமர் வாஜ்பாய், எதிர்கட்சித்தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பலர் இருந்தனர்.

மக்களவை ஒத்திவைக்கப்பட்டதால், பிரதமரும், எதிர்கட்சி தலைவரும் வெளியே வந்தனர். துணை குடியரசுத்தலைவர் வெளியேவர தயாராகியதால், 12 ஆம் எண் வாயிலில், அவரின் வாகனத்தை தயாராக நிறுத்திய பாதுகாப்பு அதிகாரி, அதனருகில் அவருக்காக காத்திருந்தார்.

அந்த சமயத்தில், இணையமைச்சர் மதன் லால் குரானாவுடன், பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் குறித்து, மூத்த செய்தியாளர் சுமித் அவஸ்தி பேசிக்கொண்டு இருந்தார்.

"அவரிடம், சக ஊடகவியலாளர்களுடன், அந்த சட்டம் குறித்து பேசிக்கொண்டு இருந்தேன். அப்போதுதான், அந்த தோட்டா சுடப்பட்டது" என்கிறார் சுமித் அவஸ்தி.

DL-3CJ-1527 என்ற கார், 12ஆம் எண் வாயிலைநோக்கி வேகமாக வந்தது. பொதுவாக, அந்த வளாகத்தில் வரும் வாகனங்களைவிட இதன் வேகம் சற்று அதிகமாகவே இருந்தது.

இதைபார்த்த, பாதுகாப்பு அதிகாரி ஜகதீஷ் பிரசாத் யாதவ், அந்த வாகனத்தை நோக்கி ஓடினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

வேகமாக வந்த வாகனம், நேராக துணை குடியரசுத் தலைவரின் வாகனத்தின் மீது மோதியது. பிறகு, உள்ளிருந்தவர்கள் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர்.

அவர்களிடம் மிகவும் மேம்பட்ட துப்பாக்கிகளும், கையெறி குண்டுகளும் இருந்தன.

நாடாளுமன்றத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தவர்களும், இந்த சத்தத்தை கேட்டவுடன், வெவ்வேறு யூகங்களை கொண்டனர். நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில் யாரோ பட்டாசு வெடித்ததாகவே பலரும் கருதினர்.

சத்தம் வந்த பகுதியை நோக்கி, செய்தியாளர்களும், ஒளிப்பதிவாளர்களும் ஓடத்தொடங்கினர். அங்கு என்ன நடக்கிறது என்று அவர்கள் அறிய முயன்றனர்.

"நான் இந்த சத்தத்தை கேட்டவுடன், இணையமைச்சர் குராணாவிடம் இது குறித்து கேட்டேன். அதற்கு அவர், அருகிலிருப்பவர்களின் செயலாக இருக்கும் என்றார். பிறகு அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த அதிகாரி, பறவைகளை விரட்ட, தங்களின் குழுவில் யாரேனும் சுட்டிருப்பார்கள் என்று தெரிவித்தார்" என்கிறார் சுமித்.

"ஆனால், கருப்பு மேல்சட்டை அணிந்த ஒரு பையன், கையில் துப்பாக்கியுடன் ஓடுவதை நான் பார்த்தேன்"

நாடாளுமன்றத்தை நோக்கி

இந்த தாக்குதலின்போது, அங்கிருந்த பல செய்தியாளர்களும், தங்களின் நேரலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் உரையாடினார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஸ்டார் செய்தி நிறுவனத்திற்கான செய்தி வழங்கிவந்த அமர்நாத் பாரதி,"தாக்குதலுக்கு முன்பு, இரு தலைவர்களுடன் நான் நேரலையில் கலந்துரையாடினேன். பிறகு, அவர்களை என்னுடைய வாகனத்தில் அழைத்துச் சென்று, வாயிலின் முன்பு இறக்கி விட்டுவிட்டு வந்தபோது தான், துப்பாக்கிசுடும் சத்தத்தை கேட்டேன்" என்று பிபிசியிடம் கூறினார்.

"துப்பாக்கிசுடு சத்தத்தை கேட்டவுடன், நான் நேராக வெளியே சென்று, நேரலை செய்ய சென்றுவிட்டேன். அங்கிருந்த, முலாயம்சிங் யாதவின் பாதுகாப்பு அதிகாரியிடம், நான் மீண்டும், நாடாளுமன்றத்திற்குள் செல்வேன். அங்கு எந்த பயங்கரவாதியையும் நான் பார்க்கவில்லை, ஆனால், துப்பாக்கிசுடு சத்தம் மட்டும் அதிகமாக கேட்டது` என்று கூறியதாக தெரிவித்தார்.

ஏ.கே.47 துப்பாக்கியின் சத்தத்தை கேட்டதும், நாடாளுமன்ற வளாகத்திலிருந்தவர்கள் உறைந்து போயினர். நாடாளுமன்றத்திற்குள் இருந்தவர்களுக்கு எதுவுமே புரியவில்லை, அங்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள அனைவரும் முயன்றனர்.

அந்தசமயத்தில், அத்வானி, பிரமோத் மஹாஜன் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் அங்கிருந்தனர்.

"இணையமைச்சர் குராணாவிடம், ஏன் துப்பாக்கி சத்தம் கேட்கிறது, அந்த பாதுகாவலர் எங்கே என்று கேட்டேன். அப்போதுவந்த பாதுகாப்பு அதிகாரி, குராணாவின் கையைப்பிடித்து இழுத்துச்சென்று, அவரின் காரினுள் அமரச்செய்தார். பிறகு என் கையைப்பிடித்து இழுத்த அவர், குணிந்தவாறு வாருங்கள், உள்ளே செல்லுங்கள் அல்லது சுடப்படுவீர்கள் என்றார்" என சுமித் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

முதல் துப்பாக்கிதாரி எவ்வாறு கொல்லப்பட்டார்?

"அப்போதுவரையில், ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு படையினர் நாடாளுமன்றத்தில் இல்லை. சி.ஆர்.பி.எஃப் அதிகாரிகள் மட்டுமே இருந்தனர் அவர்களும், சம்பவ இடத்திற்கு வருவதற்கு, அரை கிலோமீட்டர் தூரத்தை கடக்கவேண்டும்" என்று பாரதி விளக்குகிறார்.

துப்பாக்கிதாரிக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே சண்டை மூண்டது. துணைக் குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு அதிகாரி மத்பாராசிங், அந்த துப்பாக்கிதாரியை வாயில் எண்.11இல் தடுத்து நிறுத்தினார்.

வாயில் எண்:1

அவர்களை தடுக்க முயற்சி எடுத்த விநாடியிலேயே, துப்பாக்கிதாரிகள் அவரை சுட்டனர். இருந்தபோதும், அவர் தனது வாக்கி-டாக்கி மூலம் மற்றவர்களுக்கு தகவல் அளித்ததால், அனைத்து வாயில்களும் உடனடியாக மூடப்பட்டன.

பிறகு, நாடாளுமன்றத்தினுள் நுழைவதற்காக, அவர்கள் வாயில் எண்:1 நோக்கி சென்றனர்.

துப்பாக்கி சுட்டவுடன், பாதுகாப்பு அதிகாரிகள், அங்கிருந்தவர்களை பாதுகாப்பான இடத்தில் மறைத்தனர். அவர்கள், துப்பாக்கிதாரிகளின் தாக்குதலை சமாளிக்கத் தொடங்கினர்.

"மதன்லால் குராணாவின் உதவியால், நானும் அவர்களோடு, வாயில் எண்:1 உள்ளே சென்றதும், வாயில் மூடப்பட்டது. நாடாளுமன்றத்தினுள் அத்வானி உள்ளிட்ட பல தலைவர்கள் இருந்தனர். என்ன நடக்கிறது என்று உள்துறை அமைச்சர், அத்வானியிடம் கேட்டேன், அவர் எனக்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார்" என்று அவஸ்தி விளக்குகிறார்.

"ஆனால், பிரதமருக்கும், எதிர்கட்சித் தலைவருக்கும் என்ன ஆனது என்பதே என்னுடைய கவலையாக இருந்தது. அத்வானியின் மேற்பார்வையோடு, பதில்தாக்குதல் அளிக்கப்பட்டது என்பதை, பிறகு அவரின் மகிழ்ச்சியான முகத்தை பார்த்து நான் தெரிந்துகொண்டேன்".

படத்தின் காப்புரிமை Getty Images

செய்திகள்:

இந்த நிலைவரையில், நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடந்துள்ளது என்பதை மட்டுமே, ஊடகங்கள் செய்தியாக ஒளிபரப்பி இருந்தன. உள்ளே இருந்த, தலைவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து நாடாளுமன்றத்தில் இருந்த செய்தியாளர்கள் யாருமே அதுவரை தகவல் அளிக்கவில்லை.

அதேவேளையில், வாயில் எண்:1 வழியாக துப்பாக்கிதாரிகள் உள்ளே நுழைய முயன்றனர். அப்போது, ஒரு துப்பாக்கிதாரி, பாதுகாப்பு அதிகாரிகளால் கொல்லப்பட்டார்.

ஆனால், அவரின் வயிற்றில் கட்டியிருந்த குண்டு வெடித்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஊடகவியலாளர்களின் நிலை:

"என்னோடு சேர்த்து 35 பேர் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்தோம். சுமார் இரண்டரை மணிநேரத்திற்கு பிறகு, ஒரு பெரிய வெடிச் சத்தம் கேட்டது. நாடாளுமன்றத்தில் ஒருபாகம் உடைந்ததுபோல அது இருந்தது. ஆனால், அது, ஒரு துப்பாக்கிதாரி, தனது வயிற்றில் கட்டியிருந்த குண்டை வெடிக்க செய்ததால் ஏற்பட்டது என்பதை பிறகு நாங்கள் அறிந்துகொண்டோம்" என்று அவஸ்தி விளக்குகிறார்.

சம்பவத்தை விளக்கும் ஒளிப்பதிவாளர் அன்னமித்ரா, "முதல் துப்பாக்கிதாரி சுடப்பட்ட பிறகு, அடுத்தவர், ஊடகாவியலாளர்களை நோக்கி சுடத்தொடங்கினார். அதில், ஏ.என்.ஐ ஊடகத்தின் ஒளிப்பதிவாளரின் கழுத்தில் குண்டு துளைத்தது. என் கேமராவினுள் ஒரு குண்டு சென்றது. அவர் எரிந்த கையெறிகுண்டு எங்கள் அருகில் விழுந்தது, ஆனால் வெடிக்கவில்லை. பிறகு 4 மணியளவில் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த குண்டை செயலிழக்க செய்தனர்" என்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images

நாடாளுமன்றத்தை அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள்:

எயிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த ஒளிப்பதிவாளர், பிறகு இறந்தார்.

அதன் பிறகு, நான்கு துப்பாக்கிதாரிகள் வாயில் எண்:9 நோக்கி சென்றனர். அதில் முன்று பேர் கொல்லப்பட்டனர். வாயில் எண்:5 நோக்கி ஓடிய ஒரு துப்பாக்கிதாரியை பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டனர்.

பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், துப்பாக்கிதாரிகளுக்கும் இடையே காலை 11.30 மணியளவில் தொடங்கிய சண்டை மாலை 4மணி வரை நீடித்தது. ஐந்து மணியளவில் அங்குவந்த பாதுகாப்பு அதிகாரிகள், இடத்தை முழுமையாக சோதித்தனர்.

இத்தாக்குதலில், ஒரு பெண் பாதுகாப்பு அதிகாரி, இரண்டு மாநிலங்களவை பணியாளர்கள், ஒரு தோட்டப்பணியாளர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த தாக்குதலில் தொடர்புடைய நான்குபேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட அஃப்சல்குரு, 2013 ஆம் ஆண்டு, பிப்பிரவரி 9 ஆம் தேதி, டெல்லி திஹார் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்