குஜராத் இந்தியாவின் சிறப்பாக முன்னேறிய பகுதிகளில் ஒன்றா? உண்மை நிலை என்ன?

மோதி படத்தின் காப்புரிமை SAM PANTHAKY/AFP/Getty Images

குஜராத் வளர்ச்சிக்கு மோதியே காரணம் என்று அவரது கட்சியினர் கூறுவதைப் பற்றி அம்மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றுள்ள சூழ்நிலையில் உண்மை நிலையை ஆய்வு செய்வோம்.

முன்வைக்கப்படும் வாதம்:

இந்திய மாநிலமான குஜராத்தின் வெற்றிக்கதை, அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் நாட்டின் இன்னாள் பிரதமருமான நரேந்திர மோதியின் பொருளாதார கொள்கைகயை அடிப்படையாகக் கொண்டது.

உண்மைநிலை ஆய்வு தீர்ப்பு: குஜராத்தின் பொருளாதாரம் பிரதமர் மோதி, அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோது வளர்ச்சியடைந்திருந்தாலும், இந்த வளர்ச்சிக்கு காரணம் அவரது கொள்கைகளா என்பது தெளிவாக தெரியவில்லை. மேலும் மனிதவள மேம்பாட்டில் இந்தியாவின் பிற மாநிலங்களை விட பின்தங்கியிருக்கிறது குஜராத்.

வளர்ச்சி என்று பொருள்படும் "விகாஸ்" என்ற இந்தி வார்த்தையை இந்தியாவில் இப்போது அடிக்கடி கேட்கமுடிகிறது. குஜராத்தில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்றுவரும் தற்போது, மாநிலத்தில் ஆளும்கட்சியான பாரதிய ஜனதா கட்சி, மக்கள் வாக்களிக்கும்போது இந்த வார்த்தையை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும் என்று விரும்புகிறது.

2001 முதல் 2014ஆம் ஆண்டுவரை குஜராத் மாநில முதலமைச்சராக பதவிவகித்தார் தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோதி.

அவர் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டபோது, "மோடினாமிக்ஸ்" என்று அழைக்கப்பட்ட அவரது பொருளாதார கொள்கைகளால்தான் குஜராத் துரித வளர்ச்சியடைந்த்தாக பிரசாரங்கள் செய்யப்பட்டன.

"குஜராத்தில் எந்தவொரு பகுதியும் வளர்ச்சி குன்றியதாக இல்லை", என்று குஜராத் வாக்காளர்களுக்கு பிரதமர் அண்மையில் ஒரு கடிதம் எழுதினார்.

உண்மையில் குஜராத் இந்தியாவின் சிறப்பாக முன்னேறிய பகுதிகளில் ஒன்றா? அந்த வளர்ச்சிக்கு காரணம் மோதியா?

படத்தின் காப்புரிமை AFP
Image caption குஜராத் மாநிலத்தில் முடிவடையும் கட்டத்தில் சூரியசக்தி திட்டம் ஒன்றின் கட்டுமானப் பணிகள்

"மோடினாமிக்ஸ்"

மோதியின் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியின்கீழ், சாலைகள், மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களில் குஜராத் முதலீடு செய்தது.

2000 முதல் 2012 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஊரக மேம்பாட்டு அமைச்சகம் 3000 கிராமப்புற சாலை திட்டங்களை நிறைவு செய்துள்ளது. 2004-05 மற்றும் 2013-14 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் குஜராத்தில் தனிநபர் ஒருவருக்கு கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 41% அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் மோடி குஜராத்தில் பெருமளவு பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கிவிடும் வகையில் ஃபோர்டு, சுசூகி மற்றும் டாடா உட்பட பல நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் நிர்வாக சம்பிரதாயங்களை (சிவப்பு நாடா நடைமுறை) நீக்கினார்.

2000 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், குஜராத்தின் பொருளாதார வெற்றிக்கதை இவ்வாறு சென்றது.

குஜராத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 9.8% (GSDP), இது மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து சேவைகள் மற்றும் பொருட்களின் மதிப்பு. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியான 7.7% உடன் ஒப்பிடும்போது இது அதிகம்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption தேர்தல் பேரணியில் உரையாற்றும் பிரதமர் மோதி

தரச்சான்று நிறுவனம் கிரிசிலின் பகுப்பாய்வின்படி, குஜராத்தின் உற்பத்தித் துறை அண்மை ஆண்டுகளில் வலுவாக வளர்ச்சியடைந்துள்ளது.

மோதியின் "வணிகரீதியில் நட்பு" என்ற அணுகுமுறை இந்த வளர்ச்சிக்கு உதவியது என்று கிரிசில் தரச்சான்று நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் தர்மகிரி ஜோஷி கூறுகிறார்.

"குஜராத் மாநிலத்தின் உற்பத்தி வளர்ச்சி என்பது மோதியின் முதலீட்டிற்கான சிறந்த சூழலை உருவாக்கி மாநிலத்திற்கு உதவியது என்பதற்கான உதாரணம்" என்று அவர் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption குஜராத்தில் டாடா போன்ற பெருநிறுவனங்கள் தொழில் தொடங்க ஊக்கமளிக்கும் வகையில் சிறப்பு ஒப்பந்தங்கள் மேற்கொண்டதற்காக மோதி பரவலாக மோதி அறியப்பட்டார்

எதிர் கருத்து

ஆனால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் நிகிதா சூட் இதை மறுக்கிறார். அவரின் கருத்துப்படி, குஜராத்தின் வளர்ச்சிக்கான காரணமே மோதிதான் என்ற பெருமையை அவர் பெறமுடியாது. குஜராத் ஏற்கனவே ஒரு "நிலையான விக்கெட்" தான் என்று கூறுகிறார் நிகிதா சூட்.

வரலாற்று ரீதியாக குஜராத் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது என்பதோடு இந்தியாவின் தொழில்மயமான மாநிலங்களில் குஜராத்தும் முக்கியமான ஒன்று.

டாக்டர் சூட் இவ்வாறு குறிப்பிடுகிறார்: "வணிகத்தில் சிறப்பான வரலாற்று பின்னணி, வர்த்தகம் மற்றும் திடமான பொருளாதார அஸ்திவாரம் கொண்டது குஜராத். மோதி அந்த பெருமையை அழிக்கவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம், ஆனால் அவர் அதை உருவாக்கவில்லை என்பதையும் குறிப்பிடவேண்டும்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption நீண்ட கடற்கரை கொண்ட குஜராத் பன்னெடுங்காலமாக கடல் வணிகத்தில் ஈடுபட்டிருந்தது

மோதியின் தலைமையில் குஜராத்தில் வளர்ச்சி அதிகரித்தது, எனவே அந்த மாநிலம் ஏற்கனவெ முன்னேற்றமடைந்திருந்தாலும், மோதியின் கொள்கைகள் வளர்ச்சியை மேலும் அதிகரித்தா?

இதை தெளிவாக நிரூபிக்க, 2001 மற்றும் 2014 க்கு இடையில், குஜராத் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் இடையேயான வளர்ச்சி விகிதங்கள் அதிகரித்திருப்பதை நீங்கள் காட்ட வேண்டும்.

லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸை சேர்ந்த பேராசிரியர் மைத்ரீஷ் காதக், மற்றும் லண்டன் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் சஞ்சரி ராய், இதுகுறித்து ஆய்வு செய்தார்கள்.

படத்தின் காப்புரிமை PRAKASH SINGH/AFP/Getty Images
Image caption பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோதி

குஜராத்தின் பொருளாதார செயல்திறன் மீது மோதி ஒரு தீர்க்கமான விளைவை ஏற்படுத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை" என்கிறார் பேராசிரியர் காதக்.

அவர் மேலும் கூறுகிறார்: "மோதியின் ஆட்சியில் வேளாண்துறை வளர்ச்சியானது, அதற்கு முந்தைய காலத்தை விஞ்சியிருந்தது. "ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சியிலோ அல்லது உற்பத்தியிலோ இந்தக் கூற்று உண்மையானதல்ல.

அபரிதமான வளர்ச்சி

"அபரிதமான வளர்ச்சி அடைந்துள்ளது" என்ற ஒரு புதிய முழக்கம் பரவி வருகிறது. ஆனால் சமுதாயத்தின் கீழ்நிலையில் உள்ளவர்கள் இந்த வளர்ச்சியை காணவில்லை.

சமத்துவமின்மை, கல்வி மற்றும் ஆரோக்கியம் போன்ற பல அளவுகோள்களின்படி மனிதவள மேம்பாட்டு நிலையில் குஜராத் பிற செழிப்பான மாநிலங்களுக்கு பின்னால் தங்கிவிட்டது.

குழந்தைகளின் இறப்பு விகிதத்தில் இந்தியாவின் 29 மாநிலங்களில் குஜராத் 17வது இடத்தில் உள்ளது. குஜராத்தில் குழந்தைகளின் இறப்பு, 1000க்கு 33 என்ற விகித்த்தில் இருக்கிறது. இதுவே கேரளாவில் 12, மகாராஷ்டிராவில் 21, மற்றும் பஞ்சாபில் 23.

அதேநேரத்தில் பிரசவத்தில் உயிரிழக்கும் தாய்மார்களின் எண்ணிக்கையானது (தாய் இறப்பு விகிதம் (MMR)) 2013-14-ல் 100,000க்கு 72 என்பதில் இருந்து 2015-16இல் 85 ஆக உயர்ந்தது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption குஜராத் வளர்ச்சியடைந்துவிட்டதாக கூறப்படுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்

குஜராத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பத்தில் நான்கு பேர் எடைகுறைவாக இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை கடந்த தசாப்த்தத்தில் வீழ்ச்சியடைந்திருந்தாலும், 29 மாநிலங்களில் 25வது இடத்தில் குஜராத் உள்ளது.

குஜராத்தின் தொழில்துறை வளர்ச்சி அனைவரையும் சென்றடையவில்லை என்று பேராசிரியர் காதக் எச்சரிக்கை விடுக்கிறார்.

"ஏழைகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் மற்றும் ஊதியங்கள் அல்லது சமூகச் செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றில் இருந்து போதுமான தொழிலாளர் சந்தை ஆதாயங்களை அது உருவாக்குகவில்லை என்றால் இது பரவலான வளர்ச்சியை ஏற்படுத்தாது" என்று பேராசிரியர் காதக் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Empics

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :