திருமண வீட்டுக்கு அழையா விருந்தாளியாக வந்த புலி

  • 16 டிசம்பர் 2017
திருமண விருந்தில் புலி

இந்தியாவின் மைய பகுதியிலுள்ள மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற திருமண விருந்தில் புலி ஒன்று அழையாத விருந்தினராக புகுந்து அமர்களப்படுத்திய பின்னர், அதே புலி மாநில எல்லையை கடந்து மஹாராஷ்டிர மாநிலம் சென்று நாக்பூரில் பெண்ணொருவரை தாக்கியது.

ஆண் புலி ஒன்று மத்திய பிரதேசத்திலுள்ள மசுல்காப்பா கிரமத்தில் நடைபெற்று கொண்டிருந்த திருமண விருந்து ஒன்றில் திங்கள்கிழமை நுழைந்தது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
திருமண விருந்தில் விருந்தினராக பங்கேற்ற புலி

அங்கே பீதியை ஏற்படுத்திய பின்னர் அங்கிருந்து வெளியேறி, மத்திய பிரதேசத்தின் காடான்கி காட்டுப்பகுதி வழியாக மஹாராஷ்டிரத்தின் பந்தாரா காட்டில், நகாடோங்கிரி மலைத்தொடரில், அது நுழைந்துள்ளது.

மஹாராஷ்டிராவில் நுழைந்த பின்னர், இயற்கை அழைப்புக்கு சென்றிருந்த சாந்தாபாய் ஸிங்ரு கார்காடே என்பவரை புதன்கிழமை இந்தப் புலி தாக்கியது.

அவர் பாந்தாரா மாவட்டத்தில் டும்சாரிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மனிதர் வாழும் இடங்களுக்கு அருகில் தங்கியிருக்கும் இந்தப் புலி, வெளிச்சத்தால் கவரப்படுவதாக புலிகளை கண்காணித்து வருகின்ற வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் புலியை கண்காணிக்க பந்தாரா காடுகளின் துணை பாதுகாப்பாளரின் கீழ் 7 பேர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புலியின் காணாளிப் பதிவு பிபிசிக்கு கிடைத்துள்ளது.

பிற செய்திகள் :

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கடல்வாழ் உயிரினங்களின் நீருக்கடியில் சண்டைப் போடுவோர் சங்கம்!

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :