“உதாரணமாக இருக்க வேண்டிய பிரதமரே விதிகளை மீறுவதை ஏற்க முடியாது”

மோதி படத்தின் காப்புரிமை AFP

குஜராத் தேர்தலில் வாக்களித்த பிறகு நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் முன் ஓட்டுப்போட்ட விரலை காண்பித்து, காரில் ஊர்வலாகச் சென்றார் பிரதமர் மோதி. இது தொடர்பாக,

எதிர்க்கட்சிகள் மீது வேகம் காட்டி, பாஜக மீது பாசம் காட்டி, பாரபட்சமாக செயல்படுவதாக தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டுவது சரியா? விதிமுறைகளைப் பின்பற்றுவதால் தேர்தல் ஆணையத்தின் மீது தேவையற்ற குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாக கூறுவது சரியா? என்று பிபிசி தமிழ் நேயர்களிடம் கருத்து கேட்டிருந்தோம்.

வாதம் விவாதம் பகுதியில் நேயர்கள் பதிவிட்ட கருத்துக்களை இங்கு தொகுத்து வழங்குகின்றோம்.

ஃபேஸ்புக் நேயரான சரோஜா பாலசுப்ரமணியம், “இப்போதெல்லாம் தேர்தல் கமிஷன் ஆளுங்கட்சியை சார்ந்தே செயல்படுகிறது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பிரதமரே விதிகளை மீறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று பதிவிட்டுள்ளார்.

டுவிட்டரில் இந்திரா என்ற நேயர் கூறியது: மோடி மக்களை ஒட்டு போட எப்போதுமே வலியுறுத்துவார். அதனால்தான் அவ்வாறு சென்றுள்ளார் என்கிறார்.

சக்தி சரவணன் என்ற ஃபேஸ்புக் நேயர். “தேர்தல் ஆணையம் எந்தவொரு கட்சியையும், அமைப்பையும், ஆளுமையையும் சாராமல் தனது விதிகளின்படி நடுநிலையாகச் செயல்படுமேயானால், ஆணையத்தின் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்துத் தரப்பிலிருந்தும் எழும் அல்லது இருக்காது” என்று கருத்து கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் பொம்மை என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் சண்முகம் மதன்

முத்துசெல்வன் பிரேம் என்ற ஃபேஸ்புக் நேயர், “தேர்தல் ஆணையம் எப்போதும் யாருக்கும் ஆதரவாக செயல்படாது . தேர்தலில் வெற்றி பெற்றால் ஜனநாயகம் வென்று விட்டாதாகவும் தோற்றால் பணநாயகம் வெற்றி பெற்றதாகவும் கூறுவார்கள் .தேர்தல் முடிவு ஒவ்வொன்றும் மக்கள் தீர்ப்பு தான்‘ என்கிறார்.

தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணையமாக இருந்தால், அதன் விதிகளை மீறும் அதிகாரம் இல்லை என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார் சுபா பிரபு

மானி எம் என் என்ற ஃபேஸ்புக் நேயர், தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது. உதாரணம், ஆர்கே நகர் தேர்தல். பணம் பட்டுவாடா என்று கூறி தேர்தலை ரத்து செய்யும் அளவிற்கு சென்றது, ஆனால் அதன் மீதான நடவடிக்கை என்ன? தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் அடிமையாக செயல்படுவதே உண்மை. ஆணையம் தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்த மறுப்பது ஏன்?

படத்தின் காப்புரிமை AFP

ஹேமா பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நாட்டின் குடிமகனாக தன்னுடைய ஓட்டைத்தானே மோடி பதிவு செய்துள்ளார்” என்கிறார்.

மோகன் சுந்தரா என்ற ஃபேஸ்புக் நேயர், “எதிர்க் கட்சிகள் ஏன் கொதிப்படைகிறார்கள்?? என்று கேள்வி எழுப்புகிறார்.

இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்று டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார் அருண்.

கந்தவேல் ராஜா தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், இது காலம் காலமா நடக்கிறது தானே... என்கிறார்.

ஆளும் கட்சியை மீறி தேர்தல் ஆணையம் எதுவும் செய்ய முடியாது என்பதைக் குறிப்பதாக டுவிட் பதிவிட்டுள்ளார் பைரவி.

கோபி சந்திரன் என்ற ஃபேஸ்புக் நேயர், “விரலை காட்டினால் தவறா. பிரச்சாரம் எதுவும் செய்யவில்லையே‘ என்று வாதிடுகிறார்.

மோடி செய்தது விளம்பரமே என்கிறார் ராஜசேகர் குறிச்சி.

“தேர்தல் கமிஷன் ஆளுங்கட்சியை சார்ந்தே செயல் படுகிறது‘ என்பது ஜான்பீட்டர் ஞானபிரகாசம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள கருத்தாகும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்