குஜராத் தேர்தல் முடிவுகளில் சீனாவின் ஆர்வத்திற்கு காரணம் என்ன?

  • 17 டிசம்பர் 2017
மோதி மற்றும் ஷி ஜின்பிங் படத்தின் காப்புரிமை AFP

நரேந்திர மோதியை சிறந்த தலைவர் என்று நிரூபித்த மாநிலத்தில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆட்சி அவரது கட்சியின் கைகளில் இருக்குமா என்பது திங்கள்கிழமை மதியம் தெரிந்துவிடும்.

நாடு முழுவதும் குஜராத் தேர்தல் முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறது. இமாச்சல் பிரதேச மாநிலத்திலும் தேர்தல் நடைபெற்றாலும் அதன் முடிவுகளும் திங்களன்றே வரவிருந்தாலும் அந்த மாநிலம் குஜராத் அளவிற்கு மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.

இந்தியா மட்டுமே குஜராத் தேர்தல் முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறதா? இல்லை. இந்தியாவின் ஆர்வத்தில் சற்றும் குறையாமல் அண்டை நாடுகளும் குஜராத் தேர்தல் முடிவுகளை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

தேர்தல் பிரசாரத்தில் பாகிஸ்தானின் பெயர் பரவலாக அடிப்பட்டது என்றாலும், குஜராத் மாநில தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் மற்றொரு நாடு சீனா என்றால் வியப்பாக இருக்கிறதா?

சீனாவுக்கு இந்தியாவின் மேல் அதீத ஆர்வம் ஏன்?

படத்தின் காப்புரிமை Getty Images

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசார பத்திரிகையாக கருதப்படும் 'குளோபல் டைம்ஸ்' வியாழனன்று வெளியிடப்பட்ட கட்டுரையில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

"இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தது. சீனாவில் பல நிபுணர்கள் அங்குள்ள நிலைமையை கவனத்துடன் கண்காணித்து வருகிறார்கள். தேர்தலின் முடிவு திங்களன்று வரவிருக்கிறது."

இந்தியா - சீனா இடையேயான சமநிலையற்ற வர்த்தகம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே உள்ள சமநிலையற்ற வர்த்தகம்

"குஜராத் தேர்தல், அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோதியின் சீர்திருத்த திட்டத்தை அடிப்படையாக வைத்து அக்னிப்பரிட்சையாக நடத்தப்படுகிறது. மேலும் இந்தியாவுடன் சீனாவிற்கு அரசியல் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இது சீனாவிற்கு பெரும் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது. "

'குளோபல் டைம்ஸ்' பத்திரிகையில் எழுதியிருப்பதை படித்துப் பாருங்கள்

படத்தின் காப்புரிமை Getty Images

மோதியின் பாரதிய ஜனதா கட்சி குஜராத்தில் தோல்வியைத் தவிர்க்க தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டில் பிரதமராக பதவி ஏற்பதற்கு முன், அவர் இந்த மாநிலத்தில் 13 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார்".

'மேக் இன் இந்தியா' போன்ற திட்டங்கள் மற்றும் ஜி.எஸ்.டி உள்ளிட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் 'மோதியின் வளர்ச்சி மாதிரி' என்று அழைக்கப்படுகின்றன. குஜராத்தில் நல்ல பலனை கொடுத்த தமது வளர்ச்சி மாதிரியை நாடு முழுவதிலும் செயல்படுத்தப்போவதாக மோதி கூறியிருக்கிறார்'.

"நரேந்திர மோதியின் சீர்திருத்தங்கள் மற்ற அரசியல் கட்சிகளாலும், சில பொருளாதார நிபுணர்களாலும் குறைகூறப்பட்டாலும், 'குஜராத் மாதிரி'யை மதிப்பிடுவது தற்போது குஜராத் மக்களின் கைகளில் இருக்கிறது, அவர்கள் மிகவும் திறமையானவர்கள்."

சீன நிறுவனங்கள் மீது தாக்கம்

படத்தின் காப்புரிமை GLOBALTIMES.CN

''தேர்தலின் முடிவு எப்படியிருந்தாலும் சரி, மோதியின் சீர்திருத்த பட்டியலை செயல்படுத்துவதில் சம்பந்தப்பட்டவர்களின் எண்ணத்தில் அது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். சீனாவின் முதலீடு அதிகரித்துள்ளது என்பதோடு, இந்தியாவில் சீனாவின் நேரடி முதலீடு 2016ஆம் ஆண்டைவிட கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது."

இந்தியா - சீனா மோதல் ஏற்பட்டால் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

இந்தியா-சீனா பதற்றத்தின் பின்னணி என்ன?

"இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான எதிர்காலம் இந்தியாவில் ஷியோமி மற்றும் ஓப்போ போன்ற சீன நிறுவனங்களிடம் நேரடியான தொடர்புடையது."

குஜராத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற்றால், மோதி அரசு பொருளாதார சீர்திருத்தங்களை தீவிரமாக செயல்படுத்தும். இந்தியாவில் இருக்கும் சீனாவின் நிறுவனங்களிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும்."

பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் தோற்றால் நிலைமை என்னவாகும்?

படத்தின் காப்புரிமை AFP

குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி தோற்றுவிட்டால் மோதி அரசு உத்தேசித்துள்ள பொருளாதார சீர்திருத்தங்களுக்கு அது பெரும் பின்னடைவாக இருக்கும். "

"குஜராத்தில் பா.ஜ.க தோல்வியடைந்தால் அது மற்ற மாநில வாக்காளர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, மோதியின் பொருளாதார சீர்திருத்தங்கள் கைவிடப்பட வேண்டிய சூழல் உருவாகலாம்."

குஜராத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றாலும், பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால் இந்தியாவின் சீர்திருத்தத் திட்டங்கள் அந்தரத்தில் தொங்கும் நிலை உருவாகலாம்."

தேர்தல் முடிவுகளை கண்காணிப்பது

படத்தின் காப்புரிமை PTI

"குஜராத்தில் பா.ஜ.க. தோல்வியடைந்துவிட்டால்?"

"இந்த சீர்திருத்தங்கள் நாட்டின் சிறு வணிகர்கள் மற்றும் சாதாரண மக்களுக்கு பயனளிக்கவில்லை என்று மக்கள் சந்தேகப்படுகின்றனர். இந்த சீர்திருத்தங்கள் பொது மக்களுக்கு எவ்வாறு பயன்படும் என்பதற்கான வழிகளை அரசு கண்டறிய வேண்டும். "

"குஜராத் பிரசாரத்தை சீனா நெருக்கமாக கண்காணிக்க வேண்டும். இந்தியாவில் பணியாற்றும் சீன நிறுவனங்கள் நீண்டகால அளவில் ஏற்படப்போகும் பொருளாதார கொள்கை மாற்றத்துக்குத் தயாராக இருக்க வேண்டும், அடுத்த வாரம் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், இந்திய பொருளாதாரச் சந்தைகளில் ஏற்படும் கொந்தளிப்பிற்கும் தயாராக இருக்கவேண்டும். "

இந்தியா-சீனா பிரச்சனை: ஓர் எல்லை கிராமத்தின் பார்வையில் (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இந்தியா

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :