பாஜகவின் வெற்றி: மோதி முதல் ஜோதிமணி வரை ட்விட்டரில் சொன்னது என்ன?

  • 18 டிசம்பர் 2017

குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. குஜராத்தில் பாஜக வெற்றி முகத்தில் உள்ளது. ஹிமாச்சல பிரதேசத்திலும் பாஜக ஆட்சி அமைக்கும் வலுவான நிலையில் உள்ளது.

படத்தின் காப்புரிமை Kevin Frayer

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் இருபத்தி ஏழு ஆண்டுகளுக்கு பிறகு பாஜக சிறிது சரிவை சந்தித்திருக்கிறது. எனினும் ஆட்சியைத் தக்கவைக்கும் வாய்ப்புகளே அதிகமாக உள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் இந்தத் தேர்தல் முக்கிய பேசுபொருளாகியுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும் இதுகுறித்து கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். மோதி முதல் ராகுல் வரை என்ன கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள் என்பதை பாருங்கள்.

பிரதமர் மோதி :

ஹிமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தல் முடிவுகள் நல்ல ஆட்சி மற்றும் வளர்ச்சிக்கான அரசியலுக்கு கிடைத்த வலுவான ஆதரவு என்பதை காட்டுகின்றன. இந்த மாநிலங்களில் வலுவான வெற்றிக்கு காரணமான, அங்கே கடுமையாக உழைத்த பாஜக தொண்டர்களை தலைவணங்குகிறேன்

Image caption நடிகர் பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ் ராஜ்

அன்புக்குரிய பிரதமரே, வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். ஆனால் நீங்கள் உண்மையாகவே மகிழ்ச்சியடைகிறீர்களா?

ஜோதிமணி :-

குஜராத்தில் பிரதமர் அழுகிற அழுகையைப் பார்த்தால் கைக்குட்டை காணாது போல, கரூரிலிருந்து பெட்ஷீட்டுகள்தான் அனுப்பவேண்டும் !

இந்த அழுகை அழுது, கடல் விமானம் கொண்டுவந்து, தேர்தல் கமிஷனை தேர்தலை தள்ளிவைக்கச் சொல்லி, நாடாளுமன்றதை மூடி, மத்திய, மாநில அரசு, கார்ப்பரேட்டுகளின் பெரும் பணம், ஊடகங்களின் உதவி இவ்வளவு இருந்தும் #Mission150 காணோம். 2014ல் பெற்ற 34% வாக்குகளை இழந்துள்ளது. வெற்றிக்கு நல்வாழ்த்துகள்

ஹெச்.ராஜா : -

குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் வாகை சூடியிருக்கிறது பாஜக. குஜராத் சட்டமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்தது மட்டுமின்றி பெரும்பாலானோரின் ஓட்டுக்களையும் பெற்றுள்ளது. காங்கிரசின் சாதி மற்றும் குடும்ப அரசியல் குஜராத்தில் வீழ்த்தப்பட்டிருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

ராகுல் காந்தி :-

மக்களின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்கிறது. இரண்டு மாநிலங்களிலும் பதவியேற்கவுள்ள புதிய அரசுக்கு வாழ்த்துகள் . என் மீது அன்பு செலுத்திய குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :