குஜராத்தில் பா.ஜ.க வெற்றிக்கு ஹர்திக் படேல் சொல்லும் காரணம் ?

  • 18 டிசம்பர் 2017

மாநிலத்தில் செல்வாக்கு மிக்க விவசாய சாதியான பட்டிதார் இனத்தை சேர்ந்த பட்டேல் சமூகத்தை சேர்ந்தவர் ஹர்திக் பட்டேல். இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து தீவிரமாகப் போராடிவந்தபோது போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஹர்திக் குஜராத்தில் பிரபலமானார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption செய்தியாளர் சந்திப்பில் பேசும் ஹர்திக் பட்டேல்

எங்கள் பட்டிதார் சமூகத்தினர் பெரும்பான்மையாக இருந்த இடங்களில் பாரதிய ஜனதா கட்சியின் பேரணிகளுக்கு கூடிய குறைந்த கூட்டமே அவர்களின் செல்வாக்கிற்கு சாட்சி, அப்போது இல்லாத மக்களின் ஆதரவு சில நாட்களில் எப்படி மாறியது? வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதுதான் ஒரே சாத்தியம்.

தொடர்புடையசெய்திகள்

செய்தியாளர்களிடம் பேசிய ஹர்திக், 'பா.ஜ.கவின் வெற்றிக்கு காரணம் அரசியல் சாதுரியம் அல்ல, வாக்குப்பதிவு இயந்திரமும் பணமுமே' என்று தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption குஜராத் தேர்தலில் தீவிரமாக பிரச்சாரம் செய்த பிரதமர் மோதி

அகமதாபாத், சூரத் மற்றும் ராஜ்கோட் உள்ளிட்ட 12 முதல் 15 தொகுதிகளில் வெறும் 200, 400, 800 வாக்குகளில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. அந்த தொகுதிகளில் எல்லாம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரச்சனை இருந்த்து. சில இடங்களில் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டதை நானே நேரடியாக பார்த்தேன். அந்த இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன என்று நினைக்கத் தோன்றுகிறது."

'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்' தொடர்பாக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டும். ஏ.டி.எம் இயந்திரங்கள் ஹேக் செய்யப்படும்போது, ஈ.வி.எம் (மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்) ஹேக் செய்யமுடியாதா என்ன? என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

பட்டிதார் சமூகத்தினர் பெரும்பான்மையினராக இருக்கும் இடங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக வாக்குகள் போடப்பட்டிருக்கின்றன. அந்த இடங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தான்மட்டும் தனியாக போராடவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். ஒரு கோடி மக்கள் கூடிய பேரணி எப்படி பயனற்றதாக போகும் என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"வெற்றிபெற்றவர்களே வழிநடத்துபவர்கள். பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்காக வாழ்த்துத் தெரிவிக்கிறேன். ஆனால் நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் சார்ந்தவனில்லை, எங்கள் இயக்கம் மேலும் உறுதியாக எதிர்காலத்தில் பணியாற்றும்."

வேலையில்லா திண்டாட்டத்திற்கு எதிரான தங்கள் போராட்டம் தொடரும் என்று கூறிய ஹர்திக் படேல், நாங்கள் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறோம் என்று சூசகமாக குறிப்பிட்டார்.

இதர செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :