குஜராத் தேர்தலில் மோதியின் மாயாஜாலம் பலித்ததா?

படத்தின் காப்புரிமை Reuters

இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் கட்சியான ஆளும் பாரதீய ஜனதா கட்சி அவரது சொந்த மாநிலத்தில் தனது தொடர்ச்சியான ஆறாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

பாஜகவின் இந்த நூலிழை வெற்றியிலிருந்து கிடைக்க பெறும் சில விடயங்கள்.

இன்னும் எடுபடுகிறது மோதியின் மாயாஜாலம்

ஒரு சில வாரங்களுக்கு முன்பு, அது ஒரு அதிசயம் போல் தோன்றியது. ஆனால், பெரிதும் நம்பப்படும் ஒரு கருத்து கணிப்பில் பாரதீய ஜனதாவுக்கும் காங்கிரஸுக்குமிடையேனான இடைவெளி குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசியலுக்கு புதியவரான 24 வயதான ஹர்திக் படேலுடன் இணைந்து மோதிக்கு எதிரான தனது தேர்தலை காங்கிரஸ் சந்தித்தது. குஜராத்தின் 66 மில்லியன் மக்களில் 14 சதவிகிதமுள்ள தனது விவசாய சமூகத்திற்காக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹர்திக் படேல் கோரியிருந்தார்.

காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியின் தலைமையின் கீழ் தேர்தலை சந்திப்பது இதுவே முதல் முறையாகும். இடஒதுக்கீடு, சரக்கு மற்றும் சேவை வரி சார்ந்த குஜராத் மக்களின் பிரச்சனைகளை மையமாக கொண்டு அவர் தனது பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தார்.

படத்தின் காப்புரிமை AFP

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட மோதி ஒரு சர்ச்சைக்குரிய கருத்தையும் தெரிவித்திருந்தார். அதாவது, காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானுடன் சேர்ந்து குஜராத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த நினைப்பதாக விமர்சகர்கள் கூறுவதாக தெரிவித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

பிரதமராக இருக்கும் மோதி ஒரு மாநில தேர்தலுக்காக 40க்கும் மேற்பட்ட பொது கூட்டங்களில் பங்கேற்று பேசினார் என்பது தேர்தலை அவர் எவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொண்டார் என்பதை காட்டுகிறது.

"பாஜக பலவீனமாக இருப்பதையே இறுதி முடிவுகள் காட்டுகின்றன" என்று பாஜகவை பற்றி ஒரு புத்தகத்தை எழுதியவரான பிரசாந்த் ஜா கூறியுள்ளார். ஆனால், "திங்கட்கிழமை வந்த முடிவு முடிவுதான், மறுபடியும் அது நரேந்திர மோதிக்கானது."

காங்கிரஸ் மறுமலர்ச்சியின் பச்சைத் தளிர்கள்

இத்தேர்தலில் வெற்றிபெறுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பை ராகுல் காந்தி தவறவிட்டு விட்டதாக பலர் நம்புகின்றனர்.

படத்தின் காப்புரிமை AFP

பாஜகவின் முந்தைய குஜராத் மாநில அரசாங்கத்தின் மீது தவிர்க்கமுடியாத எதிர்ப்பும், கிராமப்புற அதிருப்தியும், பட்டேல்களின் ஒரு முரட்டுத்தனமான கிளர்ச்சியும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்படுத்திய பாதிப்பும் மற்றும் சரியான முறையில் முறைப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாததால் வருமானம் குறையவும், வணிகத்தை கடினமாகவும் ஆக்கிய சரக்கு மற்றும் சேவை வரியும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் வேட்பாளராக யாரையும் முன்னிறுத்தாமல், ஒரு வலுவற்ற அடிமட்ட அமைப்பும் இல்லாமலே தேர்தலை ராகுல் காந்தி தலைமையில் எதிர்கொண்டது. இருந்தபோதிலும், பொதுவாக காங்கிரஸ் எதிர்ப்பு மாநிலமாக பார்க்கப்படும் குஜராத்தில் கடந்த 32 ஆண்டுகளிலில்லாத சிறந்த செயல்பாட்டையும் மற்றும் கடந்த 2012ம் தேர்தலை விட 6 சதவீதம் அதிக ஓட்டுக்களையும் பெற்றுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மோசமான முடிவை கண்ட கட்சிக்கு "இலகுவான காலம் தொடங்கிவிட்டதாக" அரசியல் விமர்சகரான நீரஜா சவுத்ரி கூறுகிறார். ஆனால், மீண்டும் வெற்றிபெறும் நிலைக்கு செல்ல காங்கிரஸ் நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

அடுத்த ஆண்டு நான்கு முக்கிய மாநிலங்களின் தேர்தல்கள் நடைபெற உள்ளன. பாஜக தான் ஆண்டு வரும் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் எதிர்ப்புகளை சந்திக்க நேரிடலாம். உள்ளூர் தலைவர்களை ஊக்குவிக்கவும், கூட்டணிகளை உருவாக்கவும் மற்றும் அடிமட்ட அமைப்புகளை உருவாக்கவும் ராகுல் காந்தி செயலாற்ற வேண்டும்.

"அலை மீண்டும் எங்களை நோக்கி திரும்பும்," என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான சசி தரூர் கூறுகிறார். ஆனால் அது ஒரு நீண்ட மற்றும் கடினமான போராக இருக்கும்.

சமயம் சார்ந்த சடங்குகளின் தொடர்ச்சி

ராகுல் காந்தி, தனது பிரசாரத்தின் போது இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக 25க்கும் மேற்பட்ட இந்து கோயில்களுக்குச் சென்றார்.

இதை, அவரது கட்சியால் பெரிதும் பேசப்பட்டு வந்த மதச்சார்பற்ற கோட்பாடுகளை மீறிய செயலாக பலரும் கருதினர்.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் ஹர்தோஷ் சிங் பால் கூறுகையில், ராகுல் காந்தி தொடர்ந்து மோதியின் பொருளாதார திட்டங்களுக்கு டுவிட்டர் மூலமாக கண்டணம் தெரிவித்து வருவதாகவும், ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் தான் பதிவிட்ட 3000 டுவீட்டுகளில் ஒரு முறை மட்டுமே இந்திய இஸ்லாமியர்களைப் பற்றி பதிவிட்டிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Reuters

குஜராத்தில் இம்முறை, மக்கள் தொகையில் 9% உள்ள இஸ்லாமியர்கள் பிரதான கட்சிகளால் மிகவும் புறக்கணிக்கப்படுவதோடு கண்ணுக்குத் தெரியாத சிறுபான்மையினராக அவர்களது எண்ணிக்கை குறைக்கப்பட்டுவிட்டது.

பொருளாதார ஜனரஞ்சகத்திற்கு திரும்புகிறதா?

வணிகத்தில் நட்புறவாக இருக்கும் குஜராத் போன்ற மாநிலத்தில் பெரும்பான்மை கணிசமாக குறைந்த பிறகும், பாஜகவால் 2016 நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட சீர்குலைக்கும் திட்டமான ரூபாய் நோட்டுகளுக்கான அவசர தடை, நாட்டை தனிநபர் சந்தையாக மாற்ற வடிவமைக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி போன்ற திட்டங்களால் பாஜக செயலிழந்து வருவதாக பலர் கருதுகின்றனர்.

எஞ்சியுள்ள காலப்பகுதியில், இந்தியா எந்த பெரிய பொருளாதார சீர்திருத்தத்தையும் காணாது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கக்கூடும் எனவும் அரசாங்கமானது சரக்கு மற்றும் சேவை வரியின் செயலாக்கத்தை மெருகூட்ட முயற்சிக்கும்.

2019 ஆம் ஆண்டுக்கான போர் அற்புதமானதாக இருக்கும்

திங்கட்கிழமை வெளியான முடிவு பாஜகவுக்கு அளிக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை போன்றதாகும்.

குஜராத் பாஜகவின் மிகவும் முக்கியான பகுதியாகும். ஆறாவது முறையாக தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளது காகிதத்தில் பார்க்கும்போது சுவாரசியமாக இருந்தாலும், அக்கட்சி குறைந்தபட்சம் 150 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருந்தது என்பதை நோக்கும்போது இது திருப்திகரமான முடிவாக இல்லை.

இரண்டு மாநிலங்களிலும் வெற்றி பெற்றிருப்பது பாஜகவுக்கு பின்னடைவல்ல, அதே சமயத்தில் இரண்டிலும் தோற்ற காங்கிரஸின் மறுவருகையும் இது அல்ல.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்