நாளிதழ்களில் இன்றைய முக்கிய செய்திகள்

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (புதன்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

ஒகி புயல் பாதிப்பை எதிர்கொள்ள 9,300 கோடி ரூபாய் கோருகிறது தமிழ்நாடு

பட மூலாதாரம், DIPR

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோதி பார்வையிட்டது, ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ஆகிய செய்திகள் இன்றைய நாளிதழல்களில் பிரதான இடம் பிடித்துள்ளன.

தினத்தந்தி:

நரேந்திர மோதி ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்ததும், பிரதமரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புயல் நிவாரண நிதியாக ரூ. 9,302 கோடி ரூபாய் கேட்ட செய்தியும் தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டு இருக்கிறது. அதுபோல, நாளை ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நடக்க இருப்பதும், அதற்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு குறித்த செய்தியும் பிரதான இடத்தைப் பிடித்து இருக்கிறது.

தினமணி:

பட மூலாதாரம், Getty Images

தினமணி நாளிதழ் இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகளை திறனாய்வு செய்து தலையங்கமாக வெளியிட்டு இருக்கிறது. அந்த மாநிலத்தின் பிரச்சனை, அதன் தேவை, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தேர்தல் பிரசார ஒப்பீடு என அத்தேர்தல் முடிவுகளில் எவையெல்லாம் ஆதிக்கம் செலுத்தின என்று தலையங்கத்தில் விளக்கி இருக்கிறது.

தினமலர்:

பட மூலாதாரம், தினமலர்

டைம்ஸ் ஆஃப் இந்தியா:

ஆங்கில நாளிதழ்களிலும் ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல் குறித்த செய்தியும், மோதி ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மக்களை சந்தித்த செய்தியும்தான் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. இந்த செய்திகளை கடந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவலை அடிப்படையாக கொண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் பதியப்பட்ட வழக்குகள் குறித்த செய்தியை வெளியிட்டு இருக்கிறது.

தி இந்து (ஆங்கிலம்):

சென்னை விமான நிலையத்தில் பறவைகள் விமானத்துடன் அடிக்கடி மோதுவது அதனால் விமான போக்குவரத்து தாமதப்படுவது குறித்த செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது. மேலும், ஆர்.கே.நகர் வாக்காளர் பட்டியல் குறித்த விரிவான செய்தியையும் வெளியிட்டு இருக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :