ஜெயலலிதா காணொளி வெளியீடு: தினகரனை சாடும் இணையவாசிகள்

படத்தின் காப்புரிமை Getty Images

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியதையடுத்து இணையவாசிகள் இந்த காணொளி குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.

நாளை (வியாழக்கிழமை) காலை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவிருந்த நிலையில், தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் டிடிவி தினகரனின் ஆதரவாளரான சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் இன்று (புதன்கிழமை) மதியம் செய்தியாளர்கள் மத்தியில் காணொளி ஒன்றை வெளியிட்டார்.

அதில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் தலைமுடி ஜடை பின்னப்பட்ட நிலையில் அமர்ந்தப்படி தொலைக்காட்சியை பார்த்து கொண்டிருப்பது போன்றும், பின் கோப்பையில் இருக்கும் பழச்சாறை குடிப்பதை போன்றும் காட்சிகள் இருந்தன. வெற்றிவேல் வெளியிட்ட காணொளியை ஊடகங்கள் வெளியிட்டதை தொடர்ந்து அது வேகமாக பரப்பப்பட்டது.

தொடர்ந்து, முதல்வரின் காணொளிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் டிடிவி தினகரனுக்கு கண்டனம் தெரிவித்தனர். பல்வேறு சர்ச்சைகளை அக்காணொளி கிளப்பிய நிலையில், இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடியும்வரை ஊடகங்கள் ஜெயலலிதாவின் இந்த காணொளியை ஒளிபரப்ப கூடாது என்று கூறி தேர்தல் அணையம் அறிக்கை வெளியிட்டது.

தேர்தல் ஆணையத்தின் அறிக்கையையடுத்து காணொளியை ஒளிபரப்புவதை தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் நிறுத்தின. ஆனால், சமூக வலைத்தளங்களில் ஜெயலலிதாவின் இந்த லட்சக்கணக்கானோரால் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.

இணையவாசிகள் பலர் இந்த காணொளி குறித்த பல்வேறு சந்தேகங்களை எழுப்பி தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதன் சில கருத்துகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

ஜெயலலிதா விடியோ உண்மையா என்பதை உறுதி செய்ய, விடியோ பதிவு செய்த நேரம், தேதியை சரிபார்க்க, அது எடிட் செய்யப்பட்டதா என்பதைப் பார்க்க அதனை தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும். இப்படி ஒரு விடியோ தம்மிடம் இருப்பதாக திவாகரன் மகன் குறிப்பிட்டு மூன்று மாதம் ஆன நிலையில் அதை சமர்ப்பிக்கும்படி மாநில அரசு அவர்களைக் கேட்கவில்லை என்கிறார் விமர்சகர் சுமந்த் சி.ராமன்.

ஜெயலலிதாவின் தனிப்பட்ட விடியோவை வெளியிடுவது அவரது அந்தரங்கத்துக்கும், கண்ணியத்துக்கும் அவமரியாதை என்கிறார் மகேஷ் விபி என்கிற பதிவர்.

முதலில் இறந்துவிட்டதாகச் சொன்னால் அவதூறு என்றார்கள். இப்போது உயிரோடு இருப்பதாக சொன்னால் வழக்கு என்கிறது தேர்தல் ஆணையம் என்கிறார் ஷபீர் அகமது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்