#வாதம் விவாதம்: ''உலகில் நிகழ்ந்த பல மர்ம மரணங்களில் இதுவும் ஒன்று''

ஜெயலலிதா

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காட்சி என ஒரு காணொளியை டி.டி.வி தினகரன் அணியை சேர்ந்த வெற்றிவேல் நேற்று வெளியிட்டார்.

''ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இது வெளியிடப்பட்டதா? ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டதா?'' என பிபிசி சமூக வலைத்தள பக்கங்களில் நேற்றைய 'வாதம் விவாதம்' பகுதியில் கேட்டிருந்தோம்.

இதற்கு பிபிசி நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே...

''சசிகலாவை பொருத்தவரை ஜெ அம்மையார் ஒரு வைர முட்டை இடும் வாத்து. உலகில் இருக்கும் பல மர்ம மரணங்களில் இதுவும் ஒன்று'' என்கிறார் சையத் காசிம்.

''இதற்கு முக்கிய காரணம் ஆளும் கட்சி தான் ,பிரதாப் ரெட்டியை வைத்து அரசியல் செய்ய நினைத்தார்கள் ஆனால் தினகரன் தரப்பினர் வீடியோவை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்கள்'' என தனது கருத்தை கூறியுள்ளார் பாஷா.

''ஒரு வருடம் வெளியிடப்படாத வீடியோவை இப்போது வெளியிடுவது தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான். ஜெயலலிதாவை வைத்து அரசியல் செய்கிறார்கள்'' என கூறுகிறார் சரோஜா பாலசுப்ரமணியன்.

''இது நாள் வரை கவலைப்படாதவர்கள் இப்பொழுதும் கவலைப்பட மாட்டார்கள். அரசியல் ஆதாயத்திற்கே. பிரேத மெழுகு சிலை வைத்து பிரசாரம் பண்ணிய ஒபிஎஸ் செய்தது என்ன?'' என்கிறார் சுப்பு லட்சுமி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :