நாளிதழ்களில் இன்றைய முக்கிய செய்திகள்

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (வியாழக்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

படத்தின் காப்புரிமை Getty Images

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட காணொளி என்று கூறி தினகரன் அணியை சேர்ந்த பி. வெற்றிவேல் வெளியிட்ட ஒரு காணொளி குறித்த செய்திதான் அனைத்து நாளிதழ்களிலும் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு அடுத்ததாக, இன்று வெளியாக இருக்கும் 2ஜி தீர்ப்பு குறித்த செய்தி முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

தினத்தந்தி:

ஆர்.கே. நகர் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதுபோல வெற்றிவேல் வெளியிட்ட காணொளி குறித்த செய்தி முதல் பக்கத்தில் இடம்பிடித்துள்ளது. இதற்கு அடுத்ததாக, `பேனர்` வைப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்த செய்தியும் பிரதான இடத்தை பிடித்துள்ளது.

தி இந்து (தமிழ்):

காசநோயாளிகளுக்கு விழிப்புணர்வு அளிப்பது தொடர்பாக தி இந்து தமிழ் நாளிதழ் தலையங்கம் எழுதியுள்ளது. காசநோயாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.500 வழங்கப்படும் என்ற மத்திய காசநோய் தடுப்புப் பிரிவின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றபோதும் நோய் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதில் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்று தன் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது..

மேலும், அந்நாளிதழ் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக வெளியிடப்பட்ட காணொளி குறித்து கார்ட்டூன் வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை தி இந்து

தினமலர்:

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவது தொடர்பாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. "அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதால், 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்தியுள்ளதுடன், கையில் உள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதையும் ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது", என்கிறது அந்தச் செய்தி.

டைம்ஸ் ஆஃப் இந்தியா:

ஆங்கில நாளேடுகளிலும் ஜெயலலிதா சிகிச்சை பெறுவது தொடர்பாக வெற்றிவெல் வெளியிட்ட காணொளி குறித்த செய்தியே பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. அதற்கு அடுத்ததாக, டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று வழங்கு இருக்கும் 2ஜி தீர்ப்பு குறித்த செய்தி முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

படத்தின் காப்புரிமை Chandan Khanna

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கார்ப்பரேட் மருத்துவனை சிகிச்சை கட்டணம் தொடர்பாக தலையங்கத்தை வெளியிட்டுள்ளது. கட்டுபாடுகள் கார்ப்ப்ரேட் மருத்துவமனை கட்டணத்தை குறைக்கவில்லை என்று கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்