2ஜி தீர்ப்பு: 'நீதி வென்றது' - கனிமொழி

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டவர்களை விடுதலை செய்து தீர்ப்பு வந்த நிலையில், இந்த தீர்ப்பு குறித்து கனிமொழி மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்.

2ஜி தீர்ப்பு: 'நீதி வென்றது' - கனிமொழி

இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட இந்த வழக்கில் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. அது தற்போது உறுதியாகிவிட்டது'' என்று கூறினார்.

அனுமானத்தின் பெயரில்தான் இந்த வழக்கே போடப்பட்டது என்று கூறிய கனிமொழி, ''எந்த ஆதாரமும் இல்லாமல் போடப்பட்டது இந்த வழக்கு. இதனை இத்தனை வருடங்கள் நாங்கள் சந்திக்க வேண்டியிருந்தது'' என்று கூறினார்.

'' இன்று வழங்கப்பட்ட இந்த தீர்ப்பின் மூலம் நீதி வென்றது'' என்று கூறிய கனிமொழி, இந்த தீர்ப்பின் விவரம் குறித்துதான் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் செயல் தலைவர் மு.க. ஸ்டாலினிடம் கூறியதாகவும், அவர்கள் இது தொடர்பாக தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் கூறினார்.

இந்த வழக்கில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று கடந்த காலங்களில் திமுகவினர் இது குறித்து எவ்வ்ளவு முறைகள் எடுத்து கூறினாலும் அவர்கள் மீது தொடர்ந்து களங்கம் சுமத்தப்பட்டது என்று மேலும் அவர் கூறினார்.

முன்னதாக, 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டவர்களை விடுதலை செய்து டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :