வண்ணம், வாழ்க்கை, கொண்டாட்டம் - புகைப்படங்களில் இந்தியா

சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற சில நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் காட்சிப்படுத்தப்பட்ட சில நிகழ்வுகள் இதோ.

படத்தின் காப்புரிமை TelanganaCMO/facebook
Image caption ஐதராபாத்தில் டிசம்பர் 19 அன்று நடைபெற்ற உலக தெலுங்கு மாநாட்டின் இறுதி நிகழ்வின்போது நிகழ்த்தப்பட்ட நடனம்.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றம், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் இருந்து, டிசம்பர் 21 அன்று ஆ.ராசா மற்றும் பிறர் விடுதலை செய்யப்பட்டதை இனிப்பு வழங்கி கொண்டாடுகிறார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
Image caption குஜராத் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்தினம், ராஜ்கோட் நகரில் தயாராகும் காவல் படையினர்.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரோபோக்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை புரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் உணவகத்தில் உணவைப் பரிமாற எடுத்துச் செல்லும் ஒரு ரோபோ.
படத்தின் காப்புரிமை Sanjay Raut/Twitter
Image caption பால் தாக்கரே என்று அறியப்படும் மறைந்த, சிவ சேனா கட்சியின் தலைவர் பால் கேசவ் தாக்கரேயின் வாழ்க்கை வரலாறு இந்தி மற்றும் மராத்தி ஆகிய இரு மொழிகளில் 'தாக்கரே' எனும் பெயரில் படமாகிறது. நவாசுதீன் சித்திக்கி, தாக்கரேவாக நடிக்கும் இப்படத்தின் முன்னோட்டத்தை டிசம்பர் 21 அன்று அமிதாப் பச்சன் வெளியிட்டார்.
படத்தின் காப்புரிமை Ajay Jalandhari
Image caption பஞ்சாபில் சீக்கிய மத சடங்கு ஒன்றின் போது 'நக கீர்த்தன்' என்ற சமய நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம்
படத்தின் காப்புரிமை AFP PHOTO / INDRANIL MUKHERJEE
Image caption 'சல் ரங் தே' (வாருங்கள்.. வர்ணம் பூசலாம்) எனும் ஓவியக் கலைஞர்கள் குழு, நகர்புறச் சேரிகள் பற்றிய எண்ணத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மூன்று நாட்களில் 120 சேரி சுவர்களில் வர்ணம் பூச அக்குழு முடிவு செய்தது. டிசம்பர் 21 அன்று மும்பையில் உள்ள அசால்பா பகுதியில் வர்ணம் பூசுபவர்களை கடந்து செல்கிறார் ஒருவர்.
Image caption குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றத்தைக் கொண்டாடும் சூரத் நகரைச் சேர்ந்த அக்கட்சியின் தொண்டர்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :