ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது

முன்னதாக, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கிய ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை வாக்குவாதம் காரணமாக நிறுத்தப்பட்டது

வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கும் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரனின் ஆதரவாளர்களுக்கும், அதிமுகவின் வேட்பாளரான மதுசூதனனனின் ஆதரவாளர்களுக்கும்,இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

முன்னதாக முதல் சுற்றின் முடிவில் டிடிவி தினகரன் 5339 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கித்தார்; அதிமுகவின் வேட்பாளரான மதுசூதனன் 2738 வாக்குகளும், திமுக வேட்பாளரான மருது கணேஷ் 1181 வாக்குகளும், பாஜக வேட்பாளர் கரு நாகராஜன் 66 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்