வாதம் விவாதம்: ''ஒரு தேர்தலில் பணம்தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது''

வாதம் விவாதம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், டி.டி.வி தினகரன் சுயேச்சை வேட்பாளராக வென்றுள்ள நிலையில், தினகரனுக்கு பெரும் ஆதரவு கிடைத்த்தற்கு வெற்றிவேல் வெளியிட்ட ஜெயல்லிதாவின் காணொளி காரணமா? ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் தலைமை மீது நம்பிக்கையின்மை காரணமா? என்று வாதம் விவாதம் பகுதியில், கேட்டிருந்தோம்.

இதற்கு, பிபிசியின் முகநூல், ட்விட்டர் ஆகிய தளங்களின் நேயர்கள் அளித்த கருத்துகளை தொகுத்தளிக்கிறோம்.

''வீடியோ காரணமில்லை, மோதியுடன், ஆதிமுக பழகியதும், அதன் செயல்பாடுகளுமே காரணம்'' என்று தெரிவித்துள்ளார், முகமது தருசில்.

'இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் மீதுள்ள கோபம். வேறொன்றுமில்லை, அந்த காணொளி எந்த தாக்கத்தையும் உருவாக்கவில்லை'' என்று, டிவிட் செய்துள்ளார், சுசீ ரமேஷ் எனும் நேயர்.

''இ.பி.எஸ் -ஓ.பி.எஸ் மட்டுமல்ல, ஸ்டாலின் மீதும் நம்பிக்கை இல்லை'' என்று கூறியுள்ளார், செல்வ பிரகாஷ்.

"இந்த நிலைக்கு இ.பி.எஸ் ஒ.பி.எஸ் இருவருமே காரணம்..."என்பது, பாரதி ராஜா என்பவரின் கருத்தாக உள்ளது.

"வெற்றி பெற்றால் இந்த ஆட்சி கவிழும் என்ற நம்பிக்கையில் தான் ஓட்டு போட்டு இருக்கிறார்கள்", என்று கருத்து தெரிவித்துள்ளார், அஸ்வின் ஐயப்பன்.

"பணம் தான் முக்கிய காரணம். பணத்திற்கு அடிமையாகி விட்ட தமிழக மக்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. இனியும் கொள்கை கோட்பாடு என்று கூறி அரசியல் செய்ய முடியாது. ஓட்டுக்கு அதிக பணம் செலவழிப்பர்கள் தான் வெற்றி பெற முடியும்"என்பது, ராமசந்திரன் பார்த்தசாரதியின் கருத்தாகும்.

''காணொளி காரணமல்ல, ஆட்சியாளர்கள் மீதுள்ள வெறுப்பு, வேட்பாளரின் விவேகம் மற்றும் பணம்தான் காரணம்'' என்று கூறியுள்ளார், சண்முகம் ராஜ் என்ற நேயர்.

"மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனரோ...''என்ற கேள்வியை வைத்துள்ள ஆனந்த் அரசு என்னும் நேயர், ''எப்படி இருப்பினும்,60 ஆண்டு மத்திய,மாநில ஆட்சி சாம்ராஜ்ஜியம் ஓர் சுயேட்சையிடம் இடைத்தேர்தலில் சரிக்கப்பட்டுள்ளது."என்று கூறியுள்ளார்.

''ஒரு தேர்தலில் பணம்தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது'' என்று கருத்து பதிவிட்டுள்ளார், விஜய்.எஸ் என்ற் நேயர்.

''பாஜக உடன் ஏற்பட்ட கூட்டணியின் தாக்கம்'' என்ற கருத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார், சரண் என்ற நேயர்.

''இ.பி.எஸ் -ஓ.பி.எஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை'' என்று பதிவிட்டுள்ளார், கோவிந்த ராவ் என்பவர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :