ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 6 சுவாரஸ்ய தகவல்கள்

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் குறித்த 6 சுவாரஸ்ய தகவல்கள்.

ஜெயலலிதாவை முந்திய தினகரன்:

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவைவிட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார் தினகரன் . 2016-ம் ஆண்டு பொது தேர்தலில் ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா 97,218 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தை 57,673 வாக்குகள் பெற்று தி.மு.க வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் பிடித்தார். இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 39545.

இந்த இடைத்தேர்தலில் வாக்கு வித்தியாசம் 40707. அதாவது சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி தினகரன் பெற்ற வாக்குகள் 89013, இரண்டாவது இடத்தைப் பிடித்த அதிமுக வேட்பாளர் மதுசூதனன் பெற்ற வாக்குகள் 48306.

தபால் வாக்கு:

இந்த தேர்தலில் ஒரே ஒரு தபால் வாக்குதான் பதிவானது. அந்த வாக்கைப் பெற்றவர் திமுக வேட்பாளர் மருது கணேஷ்.

நோட்டா:

இத்தேர்தலில் பா.ஜ.க நோட்டாவைவிட குறைந்த வாக்குகளே பெற்றது. நோட்டா பெற்ற வாக்குகள் 2373. பா.ஜ.க பெற்ற வாக்குகள் 1417.

சுயேச்சை வேட்பாளர் வெற்றி:

11 ஆண்டுகளுக்குப் பின் சுயேச்சை வேட்பாளர் தமிழ் நாட்டில் வெற்றி பெற்று உள்ளார். 2006-ம் ஆண்டு தளி சட்டமன்ற தொகுதியில் ராமச்சந்திரன் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார். அதற்கு பின் இந்த இடைத் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.

வைப்புத் தொகை இழப்பு:

இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷ் (24,651 வாக்கு) உட்பட 57 வேட்பாளர்கள் வைப்புத் தொகையை இழந்தனர்.

தொடர்ந்து முன்னிலை:

மொத்தம் 19 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடந்தது. தபால் வாக்கு எண்ணிக்கையை தவிர்த்து அனைத்து சுற்றுகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரனே முன்னிலை வகித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்