ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வி: திமுக அமைத்த விசாரணைக் குழு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாஸிட் இழந்ததையடுத்து, தேர்தலில் கட்சி நிர்வாகிகளின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள விசாரணைக் குழுவை நியமித்துள்ளதாக கட்சியின் தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை MARUDHU GANESH/FACEBOOK
Image caption ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் திமுக வேட்பாளர் மருது கணேசுடன் மு.க.ஸ்டாலின்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமையன்று வெளிவந்த நிலையில், திராவிட முன்னேற்ற கட்சியின் கழக நிர்வாகிகளின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து முழு விசாரணை நடத்தி விரிவான விசாரணை நடத்த குழு ஒன்றை திமுக நியமித்துள்ளது.

இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மருது கணேஷ் 24,651 வாக்கு பெற்றிருந்தார். அவர் உட்பட 57 வேட்பாளர்கள் வைப்புத் தொகையை இழந்தனர்.

கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி உடனடியாக விசாரணைக் குழு அமைக்கப்படுவதாக தி.மு.க அறிவித்துள்ளது.

கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் கொறடாவுமான, அர.சக்கரபாணி, சட்டத்துறைச் செயலாளர் இரா.கிரிராஜன், சட்டத்துறை இணைச் செயலாளர் வி.கண்ணதாசன் ஆகிய மூவரும் விசாரணைக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து விசாரணை நடத்தும் இக்குழு, இந்த மாதம் 31ஆம் தேதிக்குள் தலைமைக்கு அறிக்கை அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்