நாளிதழ்களில் இன்றைய முக்கிய செய்திகள்

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்குத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

அதிமுக

தினத்தந்தி:

அதிமுகவில் டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாகச் செயல்படும் 6 மாவட்ட செயலாளர்களின் பதவி பறிக்கப்பட்ட செய்தி முதல் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. நாஞ்சில் சம்பத், சி.ஆர் சரஸ்வதி, புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் செய்தி கூறுகிறது.

தினமலர்:

பட மூலாதாரம், Dinamalar

படக்குறிப்பு,

தினமலர் வெளியிட்டுள்ள கார்ட்டூன்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எ.எல்.ஏக்கள் வெற்றிவேல், பார்த்திபன், ரெங்கசாமி, தங்கதமிழ்செல்வன் ஆகியோரிடமிருந்த மாவட்ட செயலாளர் பதவி மட்டும் பறிக்கப்பட்டுள்ளது என்றும், நீதிமன்ற வழக்கு நிலுவையால் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை என்றும் தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி:

இடைத்தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் ஆளும்கட்சிக்குச் சாதமாக அமைவது வழக்கம் என்றும், 1973 திண்டுக்கல் மக்களைத் தேர்தலுக்கான இடைத்தேர்தல், 1989-ம் மருங்காபுரி, மதுரை கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேல் ஆகியவற்றைத் தொடர்ந்து இப்போது ஆர்.கே நகர் இடைத்தேர்தலும் விதிவிலக்கான ஒன்றாக அமைந்துள்ளது என தினமணி தலையங்கம் வெளியிட்டுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா

பாகிஸ்தானில் இந்தியாவிற்காக உளவு பார்த்ததாக குற்றச்சாட்டப்பட்டு பாகிஸ்தானிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாதவ் என்பவரை இஸ்லாமாபாத்தில் அவருடைய மனைவி மற்றும் தாயார் கடந்த 22 மாதங்களில் முதல் முறையாக சந்தித்த செய்தியும், கடந்த மூன்றாண்டுகளில் தமிழகத்தில் ராகிங் சம்பவங்களின் எண்ணிக்கையை 30 சதவீதம் வரை அதிகரித்துள்ள குறித்த கட்டுரையும் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழினுடைய முதல் பக்கத்தின் பிரதான செய்திகளாக உள்ளன.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலையை நிலைநிறுத்தும் வகையில் அதிக செலவை ஏற்படுத்தும் அவற்றின் பன்னாட்டு கிளைகளை மூடுவதற்கு மத்திய அரசு வலியுத்தியுள்ளது பற்றிய செய்தியுடன், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அமைப்பில் நிரந்தர உறுப்பினர் என்ற நிலையை இந்தியா அடைய வேண்டியதன் அவசியம் பற்றிய தலையங்கத்துடன் இன்றைய தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளிவந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :