வாதம் விவாதம் : ''வியூகம் முக்கியமே ஆனால் வேகமும் வேண்டும்''

ரஜினிகாந்த் படத்தின் காப்புரிமை ARUN SANKAR

அரசியலுக்கு, தைரியத்தை விட வியூகம்தான் அவசியம் என்கிறார் ரஜினிகாந்த். வியூகம் மட்டும் இருந்தால் அரசியலில் வெற்றி பெற முடியுமா? வியூகம் தேவையில்லை, நேர்மைதான் அரசியல் வெற்றிக்கு வழிகாட்டுமா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

இதற்கு பிபிசியின் முகநூல், ட்விட்டர் ஆகிய தளங்களில் நேயர்கள் அளித்த கருத்துகளை தொகுத்தளிக்கிறோம்.

''தைரியம், நேர்மை இரண்டும் தான் முக்கியமான காரணிகள் ஒரு நல்ல அரசியல்வாதிக்கு, ஆனால் அரசியல் மூலம் பணம் சம்பாதிக்க வருபவர்களுக்கு கண்டிப்பாக வியூகம் அமைக்க தெரிந்திருக்க வேண்டும். அரசியலில் இறங்கி மக்களுக்கு சேவை செய்ய நினைப்பவர்களுக்கு நேர்மை மட்டும்தான் பிரதான மூலதனம். அவர்களே மக்களுக்கான அரசியல்வாதியுமாவார்'' என்கிறார் வீர சிகாமணி.

''தற்போதைய அரசியலில் நேர்மை தேவை இல்லை. அவர் (ரஜினி) சொல்லும் வியூகம் அதாவது குறுக்குவழிகள் தேவை'' என எழுதியுள்ளார் ருத்திரமூர்த்தி .

''அப்ப அரசியலுக்கு வருகிறேன்/மாட்டேன் என்பது வியூகமா? முடிவெடுப்பதற்கு இவ்வளவு காலம் எடுப்பவர் நல்ல திட்டங்களை தீட்டி நிறைவேற்ற 5 வருடம் போதுமா??'' என முகநூலில் கேள்வி எழுப்பியிருக்கிறார் ஜெத்ரோ பகீரதன் கந்தசாமி.

''சரியான முடிவுதான் , சரியான வியூகம் அமைத்து போர் வரும் போது களம் இறங்கலாம் . வேண்டுமானால் பத்து ஆண்டுகளை எடுத்து கொள்ளலாம் அதற்குள் போதிய அளவிற்கு படங்களை நடித்து முடித்து விடலாம். அதுவரை இதுபோன்ற வசனங்கள் தேவைப்படும்'' என்கிறார் கைமுல்லா முஸ்தக்

''இன்றைய காலத்தில் நீதி நேர்மை நியாயம் எல்லாம் மக்கள் அரசியல் வாதிகளிடம் எதிர்பார்க்கவில்லை, தைரியம், கொள்ளையடிக்கும் பணத்தில் பங்கு. ஆனால் இதெல்லாம் ரஜனிக்கு ஒத்து வராது'' என முகநூலில் கூறுகிறார் சரோஜா பாலசுப்ரமணியன் .

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: