நாளிதழ்களில் இன்று: ஜெயலலிதா மரணம் தொடர்பாக தினகரனுக்கு உத்தரவு

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்குத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தி இந்து தமிழ்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜெயலலிதா

ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு டிடிவி தினகரனுக்கு, ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

தினகரனின் உறவினர் மருத்துவர் கிருஷ்ணப்பிரியா மற்றும் சிகிச்சை அளித்த பிற மருத்துவர்களும் நேரில் ஆஜராக அந்த விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை மற்றும் கோவை நகரங்களில் உள்ள சசிகலாவின் உறவினர்களின் வீடு மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட ஆறு இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று மீண்டும் சோதனை நடத்தியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

'ஆபரேஷன் கிளீன் மணி' என்ற பெயரில் வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் மற்றும் போலி நிறுவனங்கள் மீது வருமான வரித்துறை எடுத்துவரும் நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்தச் சோதனைகள் நடைபெற்றதாக தினத்தந்தியின் முதல் பக்கச் செய்தி தெரிவிக்கிறது.

தினமணி

உலக அளவில் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 24% பேர் இந்தியாவில் இருப்பதற்கான காரணங்களையும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் உள்ள சவால்களையும் அலசியுள்ள தினமணியின் தலையங்கம், அதிகரித்து வரும், காச நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அச்சத்தை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

அது குறித்த விழிப்புணர்வை ஊடகங்களும் தொண்டு நிறுவனுங்களும் மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்று அந்தத் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

அதிகரித்து வரும் வாராக்கடன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள், நாட்டில் அதிக வேலைவாய்ப்பை அளிக்கும் துறைகளில் ஒன்று எனும் பெருமையைத் தொடர்ந்து இழந்து வருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

2017-18 ஆம் நிதி ஆண்டில் பொதுத் துறை வங்கிகளின் வேலைவாய்ப்பு வெறும் 1.3% என்ற அளவிலேயே வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால், தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் 7.5%ஆக உள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா

கடந்த 2008-இல் நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக 2016-இல் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் மஹாராஷ்டிரா திட்டமிடப்பட்ட குற்றங்கள் கட்டுப்பட்டுச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டிருந்த சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

எனினும், மும்பையில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் அவர்களைச் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் விசாரணைக்கு உட்படுத்தவுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: