நாளிதழ்களில் இன்று: பொங்கல் பரிசுக்கு தமிழக அரசு 210 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • 30 டிசம்பர் 2017

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத்தந்தி

பொங்கல் விழாவுக்கு நியாய விலைக்கு கடைகள் மூலம், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியன தமிழகத்தில் உள்ள 1 கோடியே 84 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று தினத்தந்தியின் முதல் பக்க செய்தி கூறுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதற்காக தமிழக அரசு ரூபாய் 210 கோடி செலவிடவுள்ளது.

தினமணி

கால்நடைத் தீவன வழக்கில் பீஹார் மாநில முன்னாள் முதலமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்து குறித்தும், லாலு, ஓம் பிரகாஷ் சௌதாலா, ஜெயலலிதா உள்ளிட்ட அரசியல்வாதிகள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டும் அவர்களின் அரசியல் செல்வாக்கு குறையாமல் இருப்பது குறித்து தினமணி தலையங்கம் எழுதியுள்ளது.

படத்தின் காப்புரிமை Prakash singh
Image caption லாலு பிரசாத் யாதவ்

தண்டிக்கப்பட்டும்கூட அவர்களின் செல்வாக்கில் பாதிப்பு ஏற்படவில்லை என்றால் மக்கள் லஞ்சத்தையும் ஊழலையும் ஏற்றுக்கொள்கிறார்களா என்று அதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

இந்திய அரசின் 2017-18ஆம் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை மூன்றாவது காலாண்டிலேயே இலக்கு வைக்கப்பட்ட அளவைவிட அதிகமாகியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

நிதிநிலை அறிக்கையில் 5.46 லட்சம் கோடியாக இலக்கு வைக்கப்பட்டது. ஆனால், நிதியாண்டு முடிவடைய இன்னும் மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில் அது ரூபாய் 6,12,105 கோடியை எட்டியுள்ளது.

தி இந்து தமிழ்

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத்த தேர்தல் நடைபெறவுள்ள மேகாலயா மாநிலத்தில், முதலமைச்சர் முகுல் சங்மாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய ஆளும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர் பதவி விலகியுள்ளனர்.

எனினும் சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் ஆட்சிக்கு ஆபத்து எதுவும் இல்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :