"புத்தாண்டு உறுதிமொழி நல்லது; ஆனால், பின்பற்ற முயற்சிக்கவேண்டும்"

  • 31 டிசம்பர் 2017
படத்தின் காப்புரிமை Getty Images

2017ஆம் ஆண்டு முடிந்து 2018 பிறக்கிறது. புத்தாண்டில் உறுதிமொழி எடுத்துக்கொள்வது ஒரு பயனுள்ள முயற்சியா? அல்லது, புத்தாண்டன்று மட்டுமே நினைவுக்கு வரும் ஒரு சடங்கு போன்றதா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு பிபிசி தமிழின் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் வாசகர்கள் தெரிவித்த கருத்துக்களை தொகுத்துத் தருகிறோம்.

"புத்தாண்டு உறுதிமொழி எடுப்பது நல்ல பழக்கம்தான், ஆனால் 90 சதவீதம்பேர் அதைப்பின்பற்றுவதில்லை. பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும்" என்று கூறுகிறார் சரோஜா பாலசுப்ரமணியன் என்ற நேயர்.

"புத்தாண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டு யாராலும் ஒரு வருடம் என்ன ஒரு மாதம் கூட இருக்க முடியாது. இதை நடைமுறையில் யாரும் பின்பற்ற மாட்டார்கள்" என்று பதிவிட்டுள்ளார் நஷ்மி என்ற முகநூல் பயன்பாட்டாளர்.

"புத்தாண்டு வந்தால் உறுதிமொழி எடுப்பதும் அடுத்த நாளே மறப்பதும் சகஜம்தானே?" என்று கருத்துத் தெரிவித்துள்ளார் ரகுராமன் என்ற நேயர்.

"நம்மிடம் இருக்கும் சில தேவையற்ற பழக்கங்களை விட்டு விலகி செல்ல இது ஒரு நல்ல முயற்சி. அதைத் தொடர்ந்து பின்பற்றுவது என்பது ஒவ்வொருவரின் மனசாட்சிக்கு அவர்கள் காட்டும் நேர்மையை பொறுத்து உள்ளது" என முகநூலில் எழுதியுள்ளார் சுபாஷ் சிவக்குமார்.

"நாம் எந்த ஒரு உறுதிமொழி அல்லது முயற்சியும் செயல்படுத்த வேண்டுமானால் அது புது வருடத்திலோ அல்லது குறிப்பிட்ட நேரத்திலோதான் செய்ய வேண்டுமென்பது இல்லை. அது உங்கள் மனது மற்றும் சிந்தனைகளை பொறுத்துதான் உள்ளது" என்று தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார் நெப்போலின் சுந்தர் என்ற முகநூல் பயன்பாட்டாளர்.

"புத்தாண்டு உறுதிமொழி என்பது பிரயோஜனமில்லாத ஒன்று. ஏமாற்றுவதில் இதுவும் ஒரு ரகம்" என்று பதிவிட்டுள்ளார் சிவக்குமார் என்ற நேயர்.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்