எங்களிடம் உதவி வாங்கிக்கொண்டு எங்களையே ஏமாற்றுகிறது பாகிஸ்தான்: டிரம்ப்

  • 1 ஜனவரி 2018
படத்தின் காப்புரிமை Getty Images

சமீப ஆண்டுகளில், அமெரிக்காவிடம் இருந்து பல பில்லியன் டாலர் பணத்தை உதவியாகப் பெற்றபோதிலும், பாகிஸ்தான் அமெரிக்காவிடம் பொய் கூறுவதாகவும், ஏமாற்றுவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்ட அமெரிக்க படைகளால் தேடப்பட்ட தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்ததாக தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானுக்கு அனுப்பாமல் தாமதப்படுத்தப்பட்ட 250 மில்லியன் டாலர் பணத்தை நிறுத்திவைக்கலாமா என்பதை அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.

தீவிரவாத்திற்கு எதிரான போரில் சர்வதேச நாடுகளின் முயற்சிக்கு பாகிஸ்தான் உதவியளிக்கும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அப்போது கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :