2018-ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி: புதுக்கோட்டையில் கோலாகல தொடக்கம்

  • 2 ஜனவரி 2018
படத்தின் காப்புரிமை Sundar

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டின் (2018) முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை)கோலாகலமாக தொடங்கியுள்ளது.

கந்தர்வக்கோட்டை அருகேயுள்ள தச்சன்குறிச்சியில் நடைபெறும் போட்டியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார்.

படத்தின் காப்புரிமை Sundar

போட்டி தொடங்குவதற்குமுன், மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ், அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுகளைத் துன்புறுத்த மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்தனர்.

முதல்வர் எடப்பாடியின் அறிவுரையின்படி தமிழகத்தில் இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் தடையின்றி நடைபெறும் என்றும், ஜல்லிக்கட்டு அதிகமாக நடைபெறும் மாவட்டங்களின் புதுக்கோட்டை முன்னிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Sundar

புதுக்கோட்டை மாவட்டம் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் இதில் கலந்து கொண்டுள்ளன.

வருகின்ற நாட்களில் புதுக்கோட்டை மாவட்டத்தை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

பிற செய்திகள்:

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :