வாதம் விவாதம்: ''ஓட்டுபோட போவது டிஜிட்டல் அறிமுகம் இல்லாத பாமர மக்கள்தான்''

  • 4 ஜனவரி 2018
கருணாநிதி- ரஜினிகாந்த சந்திப்பு படத்தின் காப்புரிமை Getty Images

இணையதளங்களை நம்பினால் அரசியலில் ரஜினி தோற்று விடுவார் என்று டிடிவி தினகரன் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,'' இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தினகரனின் கருத்து சரியானதா? யதார்த்த நிலையை பிரதிபலிப்பதாக இல்லையா?'' என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

இதற்கு பிபிசி நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே...

''தினகரன் சொல்வது உண்மையே. ஏனென்றால் அதற்கு சிறந்த உதாரணம் நான் சார்ந்திருக்கும் கட்சியான 'திமுக'வை சொல்வேன். இணையதளங்களை பொறுத்தவரை திமுக என்றுமே முதலிடம். ஆனால் வாக்கு அரசியல் என்று வரும்போது இணையதளம் பின்தங்குகிறது அல்லது தோற்றுபோகிறது. இணையத்தை நம்பினால் தினகரன் சொல்வதுபோல் ரஜினி தோற்றுபோவார்`'' என கருத்து பதிவிட்டுள்ளார் அப்துல் ஃபஜர்.

''மக்கள் நலத்திட்டங்களுக்கான முன்னெடுப்பால் மக்களின் மனம் நெகிழாத வரையில் இணையதளம் இயங்காத தளமாகவே இருக்கும். துண்டறிக்கைகளால் துண்டான அரசியல் கட்சியுமுண்டு. இணையத்தின் பொய் விளம்பரங்களால் ஆட்சியை ஆள்பவரும் உண்டு. இணையமோ தெருமுனையோ மக்களின் எண்ணங்களை வெளிப்படுத்தாத எந்தவொரு செயலும் மக்களிடம் எடுபடாது''என்கிறார் சக்தி சரவணன் எனும் நேயர்.

''கள எதார்த்தம் முற்றிலும் மாறுபட்டது.மக்களின் உணர்வு, எதிர்பார்ப்பு அன்றாட தேவைகளின் அடிப்படையில் அமைந்திருக்கும். இணையம் உள்ளுரில் தொடங்கி உலக அரசியலாக விரியும். தினகரன் காலத்தில் இவர் அரசியலுக்கு வந்தது பெரும் சோகமா அமையபோகுது.'' என்கிறார் பாண்டி துரை.

''மிகச்சரி. திரைநட்சத்திர அரசியல் ஓய்ந்துவிட்டது. நீட்சியாக விஜயகாந்த் கரையை கடக்கவில்லை எனவே டிடிவி சொல்வது ரஜினிக்கு மிகப்பொருத்தம்.'' என கூறியுள்ளார் சேது.

''டிஜிட்டலில் மெம்பர்கள் வேண்டுமானால் லட்சக்கணக்கில் சேருவார்கள், ஆனால் ஒட்டு போடப் போவது என்னவோ, டிஜிட்டல் அறிமுகம் இல்லாத பாமர மக்கள்தான்,'' என்கிறார் சரோஜா.

''இணையத்தை நம்பி கட்சி நடத்துறது அண்ணன் சீமானும் ட்விட்டர் கமலகாசனும் தான். ரஜினி இணையத்தை ஒரு கருவியாக தான் பயன்படுத்த போகிறார்.. அவரோட களமே வேறு..'' என பதிவிட்டுள்ளார் கார்த்திக்.

''இணையதள இணைப்பு மக்களின் அரசியல் இணைப்பு என்பதை உணர்ந்த மோடியின் வெற்றி'' என்பது வேணுவின் கருத்து.

''இணைய தளத்தை நம்புவதற்கு பதிலாக காசை நம்புங்கள்... அதை தான் சொல்ல வாரார்'' என தனது கருத்தை கூறியுள்ளார் பிரபாகரன்.

''உண்மை தான் பல ஆண்டாக இருக்கும் திமுக அ இ அதிமுக தேமுதிக இவர்கள் எல்லாம் சமுக வளைதளங்களை வைத்து என்ன செய்தார்கள்?'' என கேட்கிறார் ஷா பைஜல்.

''இணையதளத்தை விட 20 ரூபாய் டோக்கன் தான் சரியான வழி என்று சொல்கிறார் .'' என எழுதியுள்ளார் மனோகர்.

''நூற்றுக்கு நூறு உண்மை. கலிகாலம் யாரையும் நம்பக்கூடாது'' என்கிறார் பிரபு.

'' பணம் மட்டுமே முக்கியம்'' என கூறியுள்ளார் வெங்கடேசன்.

''அதான் உண்மை தினகரன் கருத்து உண்மை'' என கூறியுள்ளார் அமீர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்