நாளிதழ்களில் இன்று: பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாகச் சரியும்

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (சனிக்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத்தந்தி

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்துக்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது என்றும், தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது என்றும் தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், பிரச்சனைகள் தீரும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என தொழிற்சங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ள செய்தியும் முதல் பக்கத்தில் வந்துள்ளது.

தினமலர்

வரும் 2018-19ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட உள்ளது என்றும், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29-ம் தேதி ஜனாதிபதி ராம்ராத் கோவிந்த் உரையுடன் துவங்க உள்ளது எனவும் தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி

படத்தின் காப்புரிமை Getty Images

கால்நடை தீவன ஊழல் வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் குறைத்து கருணை கட்ட வேண்டும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார் என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவில் 6.5 சதவீதமாகச் சரியும் என மத்திய புள்ளியல் அலுவலகம் தெரிவித்துள்ளது என்ற செய்தியையும் தினமணி வெளியிட்டுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா:

படத்தின் காப்புரிமை Getty Images

ஜனவரி 18 முதல் 26-ம் தேதி வரை காலை நேரத்தில் டெல்லிக்கு விமானத்தில் பயணிப்பது சிறந்த திட்டமாக இருக்காது எனவும், இந்த நாட்களில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை டெல்லி விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் மற்றும் தரையிறங்கும் உள்ளூர் விமானங்களை ரத்து செய்யுமாறு விமான நிறுவனங்களை டெல்லி சர்வதேச விமான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :